பக்கம் எண் :

478கலித்தொகை

இதன் பொருள்.

(1) மையற விளங்கிய (2) மணிமரு (3) ளவ்வாய்தன்
(4) மெய்பெறா (5) மழலையின் விளங்குபூ ணனைத்தரப்
பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை 1யுருள்கல
னலம்பெறு கமழ் 2(6) சென்னி நகையொடு துயல்வர
5 வுருவெஞ்சா திடைகாட்டு முடைகழ லந்துகி
லரிபொலி (7) கிண்கிணி யார்ப்போவா வடிதட்பப்

1. மெய்ப்பாடென்னும் செய்யுளுறுப்பிற்கு, "மையற..................என்னுயிர்" என்பது (தொல். செய். சூ. 204. நச். உரையிலும்) "மையற..............பூணனைத்தர" என்பது (தொல். செய். சூ. 204. பே இ - வி. சூ. 578. உரையிலும்)மேற்கோள்.

2. (அ) "மணிமருளவ்வாய்..............புதல்வனை" அகம். 16 : 4 - 5. (ஆ) "மணி மருளவ்வாய்க் கிண்கிணிப்புதல்வர்" புறம். 198 : 4 - 5. (இ) "மணி புரை செவ்வாய்" கலி. 79 : 8; அகம். 66 : 14.

3. (அ) "மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ், பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச், செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை, சிந்துபு சின்னீ ரைம்படை நனைப்ப, வற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகி,
றொடுத்தமணிக் கோவை யுடுப்பொடு துயல்வரத், தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப், பொலந்தேர்மீமிசைப் புகர்முக வேழத், திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி, யாலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும்" மணி. 3 : 135 - 145. (ஆ) "அழகிய வாயி லமுத வூற றெளிவுறா,
மழலை முற்றாத விளஞ்சொல்லால்" நாலா. பெரியாழ்வார். (1) 5 : 5.

4. "மெய்பெறா வெழுத்துயிர்க்கு மழலை" சீவக. 181.

5. மழலை - இளஞ்சொல்; (அ) "விளையா மழலையின்" சிலப். 8 : 97. (ஆ) "விளையா மழலை விளைந்து" மணி. 4 : 99.

6. "மத்தக நித்திலம்" பரி. 16 : 5.

7. (அ) "செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த, தவளைவாய பொலஞ்செய் கிண்கிணி" குறுந். 148. (ஆ) "காலவை, சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு, பொடியழற் புறந்தந்த செய்வுறு கிண்கிணி" (இ) "கிண்கிணி யார்ப்ப வியலுமென், போர்யானை" கலி: 85 : 1 - 2. 86 : 9 - 10; (ஈ) "கிண்கிணி களைந்தகா லொண்கழ றொடய" (உ) "கிண்கிணிப் புதல்வர்" புறம் 77 : 1. 198 : 5) (ஊ) "தாளரிச் சதங்கை யார்ப்பத் தவழ்கின்ற பருவந் தன்னில்" கம்ப. இராவணன் சோக. 49.

(பிரதிபேதம்)1உருள்கலநலம், 2கண்ணிநகையொடு.