உடுத்துதல் கழன்ற அழகினையுடைய (1) துகில் (2) உள்ளிடுமணியாற்பொலிந்த சதங்கையொலிக்கும் ஒலிமாறாத அடியைத் தடுக்க, பாலாலே விம்மின முலையைமறந்து முற்றத்தே உருளையோடுதல் (3) வல்ல (4) தேரைக் கையாலே செலுத்தி நடத்தலைக் கற்று ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுடைய அழகமைந்த முருகனைப்போல வரும் என்னுயிரே! எ - று. கால்வறேர் வினைத்தொகையாதலின் "மருவின்பாத்திய' வாய் நின்றது. 1நனைத்தரத் துயல்வரத் தட்ப மறந்து 2இயக்கிப் பயிற்றாப் பெருவிறல்போல வரும் என்னுயிரே! பெருமா! பெருந்தகாய்! யாங் கேட்பச் சில கூறென மேலுறுப்போடுமுடிக்க. 11 | (5) பெரும, விருந்தொடு கைதூவா வெம்மையு முள்ளாய் பெருந்தெருவிற் கொண்டாடி (6) ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்கள் 3யாங் கேட்ப மருந்தோவா நெஞ்சிற் கமிழ்த மயின்றற்றாப் பெருந்தகாய் கூறு சில |
4எ - து: பெருமா! பெருந்தகாய்! நினது (7) மழலைச்சொல்லைக்கேட்டு அவ்வினிமை மாறாத மனத்திற்கு, அமுதத்தை உண்டாற்போல இன்னும் இனிதாக, விருந்தினர் வருதலாற் கையொழியாத எம்மையும் நினையாயாய்த்
1. துகில், சிறந்த உடைவகையுள் ஒன்று; "பட்டுந் துகிலுமுடுத்து" நாலடி. 264. "அரையது துகிலே மார்பினதாரம்" ஆசிரிய. "வண்ணத்துகிலுடுப்பின் வாய் விட்டழுவதுபோல் வருந்துமல்குல்" சீவக. 2625. இது பலவகைப்படுமென்பர் அடியார்க்கு நல்லார்; சிலப். 14 : 108. விசேடவுரை. கலி. 65 : 4. 85 : 5. 2. அரியென்பதற்கு, தவளையென்று பொருள்கொள்ளலுமாம்; "தேரைவாய்க் கிண்கிணி'' கலி. 86 : 9. என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 3. 'கால்வறேர், வினைத்தொகை' என்பதை நோக்க வல்லினவென்றாவது வல்லுமென்றாவது இருக்கவேண்டுமென்று தோற்றுகிறது. 4. ஆண்பாற் பிள்ளைத்தமிழ்களில் சிறுதேர்ப்பருவமெனப்படும். 5. தலைவியும் காமக்கிழத்தியைப் போலத் தன்மகனைக்கொண்டு விளையாடியவழி, தலைவிமாட்டுக் கூற்றுநிகழ்ந்ததற்கு, "பெரும, விருந்தொடு கைதூவா..........எள்ளுமார் வந்தாரே யீங்கு" என்னும் பகுதிகள் மேற்கோள். தொல். கற்பி. சூ. 6.இளம். 6. ஞாயர் - நின்றாயர்; என்றது, ஐவகைத்தாயருள் நொடி பயிற்றுவானை. 7. "அவர் மழலை கேட்ட லமிழ்தி னினிதே" இனியது. 15. (பிரதிபேதம்)1நனைக்கத், 2 இயக்கிம் இயற்றிப்பெருவிறல், 3 யான் கேட்பவருந்தோவா நெஞ்சிற் கமிழ்தயின்றுற்றாற், 4 எ - து : நினதுமழலை.
|