தாய்மார் பெரிய தெருவிலே நின்னை 1கொண்டாடிக் கற்பிக்கக் கற்பிக்க நீ அவர்பால் திருந்திக்கற்றசொற்களை யாங் கேட்கும்படி அதிலே சிலவற்றைக் 2கூறு. எ - று. இது புதல்வனை நோக்கிக் கூறியது. மேல் தோழியை நோக்கிச் செய்தி கூறுகின்றாள். 16 எல்லிழாய் எ - து: ஒளியுடைத்தாகிய பூணினையுடையாய்! 3எ - று. சேய்நின்று 4நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே வாயோடி யேனாதிப் 5பாடிய மென்றற்றா நோய்நாந் தணிக்கு மருந்தெனப் பாராட்ட வோவா 6தடுத்தடுத் (1) தத் தத்தாவென் பான்மாண 7வேய்மென்றோள் வேய்த்திறஞ் சேர்த்தலு மற்றிவன் வாயுள்ளிற் போகா னரோ எ - து : நாம் பழக்கங்கொண்டு போந்த பாணன், நீ இப்பொழுது எவ்விடத்தாயென்று வினாவ, பரத்தையர் கூற்றிலே மனந் தங்கி நமக்குச் சேயனாய்நின்று 8வாயிற்கூறும் மொழிசிதைந்து ஏனாதிப்பாடியிடத்தேமென்ற தன்மைத்தாக, நாம் நம்முடையநோயைத்தணித்தற்குக்காரணமாகிய மருந் தென்று கருதிப், 9பாராட்டாநிற்க, மாறாமல் அடுத்தடுத்து அத்தா அத்தா வென்று கூறுகின்றவனை அவன் தவறு பாராது நம்முடைய வேய்போலும் மெல்லிய தோள்களிலே மாட்சிமைப்பட ஏறட்டுக்கொள்ளுங் கூற்றிலே ஏறட்டுக்கொண்ட அளவிலும், பின்னையும் இவனுடைய வாயிடத்தினின்றும் போகானாயிராநின்றான்; இதற்குக் காரணமென்னென்றாள். எ - று. வாய்சிதைந்தென்க. எனாதிப்பாடி -(2) ஏனாதிப்பட்டங் கட்டினானொருவன் ஏற்றிய பரத்தையர்சேரி. தான் இல்லறமே பூண்டுபுதல்வனைக்கொண்டு
1. "அத்தத்தாவென்னு நின், றேமொழி" கலி. 80 : 14 - 15. 2. ராஜ பதத்திற்கு அடுத்தபதம் சேனாபதிபதமென்றும் அது மந்திரி பதத்தினும் சிறந்ததென்றும் தெரிகிறது. ஏனாதி யென்னுஞ் சொல், 'பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்' அகம். 373. 'ஏனாதி திருக்கிள்ளி', 'மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணன்', 'சோழிய ஏனாதி திருக்குட்டுவன்' புறம். 167, 174, 394. என உரை நடையிலும், ''சோழிக வேனாதி தன் முக நோக்கி'' மணி. 22 : 205. எனச் செய்யுணடையிலும் பயின்றுவருகிறது. இதனை ஈறுகுறைந்த சொல் (பிரதிபேதம்)1கொண்டாடிக்கற்பிக்கநீ, 2 கூறெனப் புதல்வனை நோக்கிக்கூறினாள்எல்லிழாய் 3ஏனத்தோழியைநோக்கிப்பின்னைச்செய்திகூறினாள் சேய், 4தாங்கொணர்ந்த, 5 பாடியோ மென்றாக, 6எடுத்தெடுத்து, 7வேயமென்றோளதிறஞ், 8வாயாற்கூறுங்கூற்றுமொழிந்து, 9பாராட்டிநிற்க.
|