விளையாடுதலே 1இனிதென்று இருந்தமை தோன்ற நோய்தணித்தற்குப் பிள்ளையை மருந்தென்றாள். "சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி, யறம்புரி யுள்ளமொடு தன்வர வறியாமைப், புறஞ்செய்து 2பெயர்த்தல் வேண்டிடத் தானும்" (1) என்பதனால், தலைவன் இவள் புதல்வனோடு விளையாடுகின்ற மனை
லென்றும் நன். பத. சூ. 12. சிறப்புப் பெயரென்றும் நன். பொது. சூ. 42. கூறுவர் மயிலைநாதர். இவனைத் தளவீரருக்கு மேலதிகாரி என்பர் நீலகேசி யுரையாசிரியர். நீலகேசி. 3. குண்டல. 48. இவனுக்கு அரசன் தன் பேரவையில் தன்கையினாலே நெற்றிக்கு ஏனாதிப்பட்டமும், விரலுக்கு ஏனாதிமோதிரமும் அணிவது மரபு. இதனை, "போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக், கார்க் கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாந், தானாதி யாதிய தார் வேந்தன் மோதிரஞ்சே, ரேனாதிப் பட்டத் திவன்'' என்னும் (தொல். புறத். சூ. 8. மேற்கோள்), செய்யுளும் 'உவகையின் மகிழ்ந்தாண்டுறையுங் காலை, யுயர்பெருந் தொல்சீ ருருமண் ணுவாவிற், கெழுநாடோறு முழுநகர் புகழப், படிவ முத்தீக் கடிகைக்கணனு, மைம்பெருங் குழுவு மத்தி கோசமு, மன்பெருஞ் சிறப்பின் மனைப் பெருஞ் சனமுந், தேனேர் தீஞ்சொற் றேவி மார்களுந், தானையுஞ் சூழத்தானே யணிந்துதன், னாம மோதிர நன்னாட்கொண்டு, சேனா பதியிவனாகெனச் செறித்துப், பன்னூறாயிரம் பழுதின்று வருவன, மன்னூர் வேண்டுவ மற்றவற் கீத்துக், குதிரையுந் தேருங் கொலைமருப்பியானையு, மெதிரிய சிறப்போ டெனைப்பலநல்கி'' பெருங். (4) 9 : 1 - 14. என்னுஞ் செய்யுட்பகுதியும், "ஆழிதொட்டான்" என்பதற்கு ஏனாதிமோதிரஞ்செறித்த சேனாபதி என்றும் "ஆழ்கடல் வையத்தில்லா வருநிதி யரசு நல்ல, சூழ்மணி யாழி செம்பொற் சூட்டொடு கண்ணிகாதற், றோழற்கட் கருளி'' என்பதற்கு, 'மன்னவன், காதற்றோழர் கட்கு உலகில் வேறுசிலர்க்கில்லாத பழைய அரசையும் ஏனாதி மோதிரத்தையும் செம்பொனாற் செய்த பட்டத்தையும் கண்ணியையும் நிதியையும் அருளி' என்றும் எழுதியிருக்கும் உரைகளும். சீவக. 2167. 2569. "மன்பட்ட வர்த்தனரு மணிமகுட வர்த்தனரு முறையால்வணங்க வொளிகா, னன்பட்டமுந்தனது கையா லணிந்து படை நாலுக்கு நாயகமெனா, மின்பட்ட வோடைநுத லிபராசன் வன்பிடரின் மிசைவைத் துகந்தன னரோ, வென்பட்ட தப்பொழுது குருசேனை மெய்ப்புளக மெழவொண்கண் முத்த மெழவே. "வில்லி. பதினெட்டாம்போர். 6. என்னுஞ் செய்யுளும் வலியுறுத்தும். கந்த. திருவிளையாட்டுப். 120 - 121 -ஆம் செய்யுட்களும் இங்கே அறிதற்பாலன. 1. தொல். கற்பி. சூ. 6.இப்பகுதியினுரையில் இச்செய்திக்கு இச்செய்யுளைமேற்கோள் காட்டினர் நச்சினார்க்கினியர். (பிரதிபேதம்)1மருந்தென்று, பெரிதென்று, 2பொய்த்தல்.
|