பக்கம் எண் :

மூன்றாவது மருதம்483

யறத்தினைக் காணவேண்டி மறைந்து இவள்பின்னேநிற்ப, எதிராக நின்ற தலைவனைக் கண்டு பிள்ளை அத்தா அத்தாவெனவும், எதிர்நின்ற தோழி முதலியோர் தன்னைக் கண்டு (1) ஆசாரஞ்செய்தாற் றலைவி அறிவளென்று அவர்களை ஆசாரஞ்செய்யாமற் கைகவித்தலிற் றோழி ஆசாரஞ்செய்யா திருத்தலின், தலைவன் அவள் பின்னின்றதை உணராமல் தோழியை வினாவினாள்.

22 உள்ளி யுழையே யொருங்கு படைவிடக்
1கள்ளர் படர்தந் ததுபோலத் தாமெம்மை
(2) யெள்ளுமார் வந்தாரே யீங்கு

எ - து : அங்ஙனம் வினாவின தலைவி தோழி குறிப்பானும் புதல்வன் அத்தா அத்தாவென்றதனானும் தலைவன் வந்தவாறு (3) கண்டு பகைவரைநினைத்து அவரிடத்தே படைக்கலங்களைச் சேர விடுதற்குக் கள்வர் வருதலைச் செய்தல் போல இவ்விடத்தே தாம் எம்மை இகழ்தற்கே வந்தார்; நம்மேல் அன்பாக வந்தாரல்லரெனத் தலைவன் கேட்பத் தோழியைநோக்கிக் கூறினாள். எ - று.

தலைவி துனி போக்குதற்கு, தலைவன் இங்ஙனம் வந்தான்.

25 ஏதப்பா டெண்ணிப் புரிசை வியலுள்ளோர்
கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச்
சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவ (4) னின்
னாணை கடக்கிற்பார் யார்

எ - து : அதுகேட்ட தலைவன் மதிலையுடைய ஊரிற் காவலாளர் கள்வரைக் கண்ணாற் காணாதிருக்கவும் அவரால் வருங் குற்றத்தைக்கருதி இங்கே கள்வரைக் கண்டேமென்று கூறுவாரைப்போலே முன் நில்லாது ஒருசிறைப்


1. எழுந்து வணங்குதல் முதலிய ஒழுக்க முறை.

2. மாரீற்று வினைமுற்றுச்சொல் பல்லோர்படக்கையாய்ப் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடிதற்கு, "எள்ளுமார் வந்தார்" என்பது மேற்கோள்; தொல். வினை. சூ. 10. சேனா. நச்சினார்க்கினியரும் இ - வி. உரையாசிரியரும் இதற்கு இவ்வடியை மேற்கோள் காட்டி, மார் உகரத்தை அடுத்துநின்றது என்பர். தொல். வினை. சூ. 10. இ - வி. சூ. 232. "சாய்மார்" (கலி. 80 : 16.) என்பதற்கு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் இலக்கணக்குறிப்பும் இங்கே அறிதற்பாலது.

3. காணல் - விளங்க அறிதல்.

4. தலைவன் தன்றவறு பெரிதாகிய இடத்துத் தலைவிமுன் பணிந்து கூறுங்கூற்றிற்கு, "நின், னாணை கடக்கிற்பார் யார்" என்பது மேற்கோள்; தொல். கற்பி. சூ. 19.நச்.

(பிரதிபேதம்)1கள்வர் படைதந்தது.