பக்கம் எண் :

484கலித்தொகை

போய் நின்று யான் செய்யாத குறைகளைக்கூறிச் சினவாதேகொள்; நின் ஆணைவழி ஒழுகுதலன்றி ஈண்டு நின் ஆணையைத் தப்புவார் யாரென்றான்.எ - று.

'சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்' என்றது (1) புலவிபொருளாக அச்சம்பிறந்தது. அது "நின்றுநனி பிரிவி னஞ்சிய பையுளும்" என்னும் (2) விதியான் உணர்க.

29 அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேன்
முதிர்பூண் முலைபொருத (3) வேதிலாண் முச்சி
யுதிர்துக ளுக்கநின் னாடை யொலிப்ப
வெதிர் 1வளி நின்றாய்நீ செல்

எ - து : அதுகேட்ட தலைவி நடுக்கமில்லாத வஞ்சனையாலே வருத்தி என் மகன்மேல் வேட்கைநிகழ 2நினையாயாய் வந்து, பூணினை யுடைய முதிர்ந்த முலைகளால் நின் மார்பொடு பொருத பரத்தைமுடியினின்றும் உதிர்ந்த துகள் சிந்திக்கிடந்த நின்னாடையது துகளை விளக்கக் காற்றின் எதிரே நின்றாய்; இங்ஙனம் நில்லாதே போவென்றாள்.
எ - று.

படிறெருக்கி - வஞ்சனையைப்போக்கியென்றுமாம். ஆடையெதிர்ப்பவும் பாடம்.

33இனியெல்லாயாம், (4) தீதிலே மென்று தெளிப்பவுங் கைந்நீவி
யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின்

1. புலவிபொருளாக அச்சம் பிறந்ததற்கு "சேய் நின்று...........யார்" என்பதை மேற்கோள் காட்டினர் பேராசிரியரும்; தொல். மெய்ப். சூ. 8.

2.தொல். கற்பி. சூ. 5. இச்சூத்திரப் பகுதியின் உரையில், "ஏதப்பா டெண்ணி........கடக்கிற்பார்யார்" என்பதனை மேற்கோள்காட்டி, சேய் நின்று என்றதனால் துனித்து நின்றவாறும் சினவலென்றதனாற் பிரிவுநீட்டித்தவாறும் நின்னாணை கடக்கிற்பார்யா ரென்(றதனால்) அஞ்சியவாறு கூறியவாறுங் காண்க. என்றனர்,இவ்வுரைகாரர்.

3. "ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற, முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத், தொடிய வெமக்குநீ யாரை" கலி. 88 : 1 - 3.

4.கற்பிடத்துத் தலைவி ஊடியவழித் தலைவன்தேற்றத் தேறுமெல்லைஇகந்த பொழுது தலைவன் ஊடுதற்கு, "தீதிலே மென்று................மறுத்தர வில்லாயின்" என்பது மேற்கோள்; தொல். கற்பி. சூ. 15.நச்.

(பிரதிபேதம்)1வளியேநின்றாய், 2நினையாய்வந்து.