மேதக்க (1) வெந்தை பெயரனை யாங்கொள்வேந் தாவா (2) விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு 1மாபோற் படர்தக நாம் எ - து : அது கேட்ட தலைவன், ஏடி! யாம் தீங்குடையேமல்லேமென்று சூளுறவும், அச்சூளுறவைக் கைகடந்து எம்மிடத்துச் சிறிதும் துனித்தநிலைமை மீட்சியில்லையாயின், தன்கன்றைக் கட்டின இடத்தே கெடாதவிருப்பத்தோடே செல்லும் பசுப்போலத் 2தாம் இனி நம்பாற் படர்தல் தகும்படி, மேம்பாடுதக்க எந்தை பெயரனை யாம் எடுத்துக் கொள்ளுவேம். 3எ - று. (3) நாமென்றது இடவழு 4வமைதி. தாமென்றும் பாடம். "முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொ, னிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே" (4) என்பதனால் எல்லா 5வென்றாள். புதல்வனை வாங்கவே துனிதீர்ந்தா
1. "அகன்பெருஞ் சிறப்பிற் றந்தை பெயரன்" ஐங்குறு. 403. என்பதும். கலி. 75 : 24 - இன் குறிப்பிலுள்ள பாகவதச்செய்யுளும் ஈண்டு அறிதற்பாலன. 2. (அ) "கன்றமர் கறவை மான,........................வருமே." (ஆ) "கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே" (இ) "கன்றுகாண் கறவையிற் சென்றவட் பொருந்தி" (ஈ) "தனிக்கன் றுள்ளிய புனிற்றாப் போல, விரைவிற் செல்லும் விருப்பின னாகி" (உ) "கன்றுபிரி கற்றாப்போற் கதறுவித்தி" (ஊ) "கன்றுகாண் கறவை யன்னான்" (எ) "கன்று பிரிந்துழிக், கறவையொப்பக் கரைந்து கலங்கினான்". (ஏ) "தாயருக் கன்று சார்ந்த கன்றெனுந் தகைய னானான்" (ஐ) "கனைத்ததன் கன்றை நோக்கிக் கரைந்துசெல் புனிற்றாப் போல,..........................எதிரே போந்தான்" என்பவைகளும் (ஒ) "கறவைதம் பதிவயிற், கன்றமர் விருப்பொடு மன்று நிறை புகுதர" (கலி. 119 : 9 - 10.) (ஓ) "கொடுந்தொழுவி னுட்பட்ட கன்றிற்குச் சூழுங், கடுஞ்சூலா" கலி. 110 : 13 - 14. (ஒள) "கன்றுசேர்ந் தார்கட் கதவிற்றாய் சென்றாங்கு, வன்கண்ண ளாய்" (கலி. 116.) என்பவைகளும் அவற்றின் குறிப்புக்களும் இங்கே அறிதற்பாலன. 3. தலைவன், நாமென்றது தலைவியை ஆகலின் இடவழுவமைதியென்றார். "நங்கையிவ ரெனநெருக னடந்தவரோ நாமென்ன" (கம்ப. சூர்ப்ப. 118) என்பது இங்கே அறிதற்பாலது. 4.தொல். பொருளி. சூ. 26. இதனுரையில் இவ்வுரைகாரர், "அதிர்வில்.................நீ செல்; இனியெல்லா" என்ற பகுதிகளை மேற்கோள் காட்டி,தலைவன் தலைவியை எல்லாவென விளித்துக்கூறலின்வழுவாயமைந்ததென்பர். (பிரதிபேதம்)1ஆபோல் படர், 2நாம் இனி, தான் இனி, 3என்று புதல்வனைவாங்கவே, 4அமைதி முறைப்பெயர், 5என்றாள் சென்றுகை.
|