பக்கம் எண் :

மூன்றாவது மருதம்487

நினக்கியாம் யாரே மாகுது மென்று
வனப்புறக் கொள்வன நாடி யணிந்தன
20 ளாங்கே, யரிமத ருண்கண் பசப்பநோய் செய்யும்
பெருமான் பரத்தைமை யொவ்வாதி யென்றா
ளவட்கினி தாகி விடுத்தனன் போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர்
புலத்தகைப் புத்தேளில் புக்கா னலைக்கொரு
25 கோறா நினக்கவள் யாராகு மெல்லா
வருந்தியா நோய்கூர நுந்தையை யென்றும்
பருந்தெறிந் தற்றாகக் கொள்ளுங்கொண் டாங்கே
தொடியு முகிரும் படையாக நுந்தை
கடியுடை மார்பிற் சிறுகண்ணு முட்காள்
30 வடுவுங் குறித்தாங்கே செய்யும் விடுவினி
யன்ன பிறவும் பெருமா னவள்வயிற்
றுன்னுத லோம்பித் திறவதின் முன்னிநீ
யையமில் லாதவ ரில்லொழிய வெம்போலக்
கையா றுடையவ ரில்லல்லாற் செல்ல
35 லமைந்த தினிநின் றொழில்.

இது புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்வித்துக்கொண்டு வருதற்குச் சேடியருடன் மகற் போக்கிய தலைமகள் அவள் நீட்டித்து வந்தவழித் "தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை யுள்ளிய வழி" (1) யால், தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.

இதன் பொருள்.

(2) ஞாலம் வறந்தீரப் பெய்யக் (3) குணக்கேர்பு
காலத்திற் றோன்றிய கொண்மூப்போ (4) லெம்முலை


1. தொல். கற், சூ. 6.

2. "நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது" மணி. 14 : 13.

3. (அ) "குணகடல் கெண்டு......................வான்ஞெமிர்ந்து, சிதரற் பெரும்பெயல் சிறத்தலின" மது. 238 - 244. (ஆ) "குணகடன் முகந்த கொள்ளை வானம்............பெருமலை மீமிசை முற்றின வாயின" அகம். 278 : 1 - 6.

4. "சென்றா, யுளைவிலை, யூட்டலென் றீம்பால் பெருகு மளவெல்லா, நீட்டித்த காரணமென்" கலி. 83 : 4 - 6.