பக்கம் எண் :

488கலித்தொகை

(1) பாலொடு வீங்கத் தவநெடி தாயினை
(2) புத்தேளிர் கோட்டம் வலஞ்செய் திவனொடு
புக்க வழியெல்லாங் கூறு

எ - து : உலகம் வற்கடம் நீங்கும்படி பெய்தற்குக் கிழக்கே எழுந்து கூதிர்க் காலத்தே தோன்றிய மேகம்போல எம்முடைய முலை பாலாலே விம்மும்படி நீபோனகாலம் மிகவும்நீட்டித்ததெனக் கூறும்நிலையிலே யாயினை; ஆதலால், தேவர்கோயில் வலம்வந்து பின்னர் இவனோடே நீ சென்ற இடங்களையெல்லாம் எமக்குச்சொல்லென்றாள். எ - று.

6 கூறுவேன், மேயாயே போல வினவி வழிமுறைக்
காயாமை வேண்டுவல் யான்

எ - து : அது கேட்ட தோழி, யான் கூறுவேன்; கூறுகின்றதனை மேவினாயேபோலக் கேட்டு அதன்பின்னாகக் கோபியாதிருத்தலை யான் நின்னிடத்தே பெற வேண்டுவே னென்றாள். எ - று.
காயேம்

எ - து : அதுகேட்ட தலைவி, யான் நின்னைக் கோபியேன் நீ கூறுகின்றவற்றையெல்லாங் கூறென்றாள். எ - று.

9 மடக் (3) குறு மாக்களோ (4) டோரை யயரு
(5) மடக்கமில் போழ்தின்கட் டந்தைகா முற்ற


1. "பாலோ டலர்ந்த முலை மறந்து" கலி. 81 : 7.

2. (அ) "கரந்தியா னரக்கவுங், கைநில்லா வீங்கிச், சுரந்தவென் மென்முலைப் பால்பழு தாகநீ, நல்வாயிற் போத்தந்த பொழுதினா னெல்லா, கடவுட் கடிநகர்தோறு மிவனை, வலங் கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை, யீர மிலாத விவன்றந்தை பெண்டிருள், யாரிற் றவிர்ந்தனை கூறு" கலி. 84 : 3 - 9. (ஆ) "குன்றே யனைய கடவுட் குலம்வலங் கொண்டு வ[ந்த, தெ](ரு, கெ)ன்றே விடுதத்திருவினை யேயினி யெங்கையர்பாற், சென்றே வருக மறக்கவின் றேசெம்ம லூரன்செல்வக், கன்றே யுனக்குங் கசந்தன வோவிக் கனதனமே" அம்பிகா. 505.

3. (அ) "ஒண்குறுமாக்கள்" மது. 461. (ஆ) "சிறுகுறுமாக்கள்" நற். 220 : 4. (இ) "ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாலின்" (ஈ) "ஊர்க்குறு மாக்க ளாட" (உ) "பல்குறு மாக்கள்" புறம். 94 : 1, 104 : 2, 159 : 7.
(ஊ) "அடர்க்குறு மாக்களொடு" (எ) "ஊர்க்குறு மாக்களும்" மணி. 13 : 40; 15 : 59.

4. "கற்றறிந்தார் கண்ட தடக்கம்"

5. "பல்வேறு புதல்வர்க் கண்டு நனி யுவப்பினும்" என்னுஞ் சூத்திரப் பகுதியுரையில், "ஞாலம் வறந்தீர வென்னும் மருதக் கலியுள்,