பக்கம் எண் :

490கலித்தொகை

முயங்கினண் 1முத்தின ணோக்கி நினைந்தே
2நினக்கியாம் யாரே மாகுது மென்று
வனப்புறக் கொள்வன நாடி யணிந்தன
20 ளாங்கே, யரிமத ருண் (1) கண் பசப்பநோய் செய்யும்
பெருமான் 3பரத்தைமை யொவ்வாதி யென்றா
(2) ளவட்கினி தாகி விடுத்தனன் போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர்
புலத்தகைப் 4புத்தேளில் புக்கா (3) னலைக்கொரு
25கோறா நினக்கவள் யாராகு மெல்லா
வருந்தியா நோய்கூர நுந்தையை யென்றும்
(4) பருந்தெறிந் தற்றாகக் கொள்ளுங்கொண் டாங்கே
(5) தொடியு முகிரும் படையாக நுந்தை
5 கடியுடை மார்பிற் சிறுகண்ணு முட்காள்
30 வடுவுங் குறித்தாங்கே செய்யும் விடுவினி
யன்ன பிறவும் பெருமா னவள்வயிற்
றுன்னுத லோம்பித் 6திறவதின் முன்னிநீ
யையமில் லாதவ ரில்லொழிய வெம்போலக்
கையா றுடையவ ரில்லல்லாற் செல்ல
35 (6) லமைந்த தினிநின் றொழில்.

1. இந்நூற் பக்கம் 276 : 4, 5. ஆம் குறிப்புக்கள் பார்க்க.

2. தலைவனிலும் தான் புதல்வற்குச் சிறந்தாளாகி அவன் காதலித்த பரத்தையர் மாட்டுச்செல்லாமல் புதல்வனைத் தன்பாற் சிறைசெய்ததற்கு "அவட்கினிதாகி...............நின்றொழில்" என்பது மேற்கோள்; தொல். கற்பியல். சூ. 6.நச்.

3. "மகனொடு, தானே புகுதந் தோனே யானது, படுத்தனெ னாகுத னாணி யிடித்திவற், கலக்கினன் போலுமிக் கொடியோ னெனச்சென், றலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண்டு" அகம். 66 : 17 - 21.

4. "பாறாங்கெனப் புகப்பாய்ந்தவ னெடுவில்லினைப் பறித்தான்" கம்ப. அதிகாயன். 168.

5. இந்நூற்பக்கம் 430 : 2 -ஆம் குறிப்பும் 435 : 1 - ஆம் குறிப்பும் பார்க்க.

6. "அமைதல்" என்பது தவிர்தலென்னும் பொருளில் வருதற்கு இவ்வடி மேற்கோள். சீவக. 982.

(பிரதிபேதம்)1முகத்தினினோக்கி, 2நினக்கிவாரேம், 3பரத்தமை, 4புத்தவளிற் புக்கான், 5கடியுண்ட, 6துறவதன்முன்னிணி.