எ - து : அதுகேட்டசேடி, மடப்பத்தையுடைய சிறிய (1) அறிவில்லாத மகளிரோடே (2) ஓரைப்பாவையைக் கொண்டு விளையாடும், வேண்டியவாறு ஒழுகும் பொழுதிலே இவன் தந்தை விரும்பின 1பரத்தைமை தொடங்கு கின்ற காலத்துளளாகிய தாயிடத்தேசென்றவனுக்கு அவளும் (3) இடப இலைச்சினையைக் (4) கைக்காணியாக இட்டு, பெரியோனே! நினது சிரிப்பினையுடைய முகத்தை யான் முத்தங்கோடற்குக் காட்டென்று கூறுகின்றவளுடைய சொரிகின்ற கண்ணீர்கள் முத்துவடங்கள் முத்தங் கழன்று விழுவனபோலே இருந்தன; பின்னை அவட்குப் பின்னர்வந்த தாயிடத்தே சென்றவனுக்கு அவளும் மனம் மயங்குதற்குக் காரணமான காமநோயைப் பொறுத்துத் தன் மகனெதிர்வந்து தழுவிக்கொண்டு பின்னர் முத்தங்கொண்டு இவனைப்பார்த்து, தலைவன் தன்னைக் கைவிட்ட தன்மையை நினைந்து நினக்கு யாங்கள் தாயாகின்ற முறைமை எம்மிடத்தின் நீங்கினமையின் இனி எம்முறையே மாவேமென்று கூறி இவனுக்கு அழகு மிகும்படி இவன் வடிவு தாங்கும்படி யான (5) பிள்ளைப்பணிகளை ஆராய்ந்து அணிந்தபொழுதே, மகளிருடைய செவ்
1. (அ) "மாவு மாக்களு மையறி வினவே" மக்க டாமே யாறறி வுயிரே" தொல். மரபு. சூ. 32. 33. (ஆ) "அவமதிப்பு மான்ற மதிப்பு மிரண்டு, மிகைமக்களான் மதிக்கற் பால - நயமுணராக், கையறியா மாக்களிழிப்பு மெடுத்தேத்தும்வையார் வடித்தநூலார்" நாலடி. 163. என்பவையும் (இ) "தவஞ்செய் மாக்க டம்முடம் பிடாஅ, ததன்பயமெய்திய வளவை மான" பொருந. 91 - 92. என்புழி, 'மக்களென்னாது மாக்க ளென்றார்; வீடுபேறு குறியாது செல்வத்தைக் குறித்தலின்' என்றும் (ஈ) மூவறு பாடைமாக்களால்'' சீவக. 13, என்புழி, 'மிலேச்ச ராதலின், ஐயறிவிற்குரிய மாக்களென்னும் பெயராற் கூறினர்' என்றும், (உ) "கோயின் மாக்கள் மடைதிறந்திட்ட தொத்தார்" சீவக. 1278. என்புழி, 'மக்கட்குரிய மனனின்றி அறிவுகெட்டமையின், ஐயறிவுடையாரென்று மாக்களென்றார்' என்றும் இவ்வுரையாளர் எழுதியிருக்கும் விசேடவுரைகளும் (ஊ) 'கையறியா மாக்கட்கன்றி நூலியற்றும் அறிவினையுடைய மக்கட்கு' என்னும் நன். வி. சூ. 137. விசேடவுரையும்இங்கே அறிதற்பாலன. 2. ஓரை - மகளிர் விளையாட்டு. 3. "பூண்டவை, எறியா வாளு மெற்றா மழுவுஞ். செறியக் கட்டி யீரிடைத் தாழ்ந்த, பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின், மையற விளங்கிய வானேற் றவிர்பூண்". கலி. 85 : 8 - 11. 4.தெய்வத்துக்கு நேர்ந்த பொருளென்ற பொருளிற் காணிக்கை யென இக்காலத்து வழங்குமொழி, கைக்காணியின் நிலை மாறுதல் போலும். 5. "என்பெறு மென்று பிள்ளைப் பணிகளுங் கவர்ந்தார்" திருவிளை. மாமனாக. 25. (பிரதிபேதம்)1பரத்தமை துடங்கு.
|