வரியினையும் செருக்கினையுமுடைய மையுண்கண்கள் பசக்கும்படி அவர்க்கு நோவைக் கொடுக்கும் நின் தந்தையுடைய 1பரத்தைமைக்குணமொன்றையும் ஒவ்வாதே கொள்ளென்றாள் : அங்ஙனங் கூறினவளுக்கு இனிதாயிருக்கும்படி சில மறுமொழிகளைக் கூறிப் போய்ப் பின்னை நம்மோடு ஒப்பாளாகத் தலைமைப்பாடுகொண்டு நம்மைக் காய்ந்திருக்கும் இந்தப் புலக்குந் தகைமை யினையுடைய புதியவள் இல்லிலேசென்றானென்றாள்; அதுகேட்ட தலைவி, ஏடா! யான் வருந்தி நோய்மிக உன் தந்தையை எந்நாளும் தான் குறித்த தொன்றை நினைவறப் பருந்தெடுத்துக் கொண்ட தன்மைத்தாக நினைவறக் கைக்கொண்டுபோம்; கைக்கொண்ட அப்பொழுதே தொடியும் உகிரும் அவைபோல் வனபிறவும் தனக்குப் படைக்கலமாகக் கொண்டு உகிராலே நுந்தையுடைய புதுமையையுடைய 2மார்பின் கண்ணும் அனையவற்றாலே ஒழிந்த சிறிய இடங்களிலும் தான் குறித்தபடியிலே வடுக்களையும் அஞ்சாளாய் நிகழ்த்தும்; ஆதலால் நினக்கு அவள் என்ன உறவுடையாள்? இவனை அடித்தற்கு ஒரு கோல் 3தருவாயாகவென்றாள்; அதற்கு அஞ்சி அவன் அழுதமைகண்டு இனி அழுகையை விடுவாயாகவென்று கூறி, நின் தந்தையுடைய காதற்பரத்தையிடத்து நீ சேர்தலைப் பாதுகாத்து நீ செல்லுதற்குத் 4திறவதாகிய இல்லிலும் மனத்தாற் கருதி அவன் நீங்குவனோ நீங்கானோவென்று ஐயப்படாமல் ஒருதலையாக நீங்கானென்று துணிந்த பரத்தையர் இல்லிலும் நின் செலவொழிந்தது கிடக்க எம்மைப்போலே கையாற்றையுடையவர் இல்லிற் சேறலன்றி வேறோர் இல்லில் நீ செல்லாதேகொள்; இனி நின்னுடைய புறத்துப் போந் தொழில்தான் முடிந்ததெனக் கூறினாள். எ - று. (1) 5தொடக்கத்துத்தாயென்றமையான் அவள் முதிர்ந்தமையும் வழிமுறைத் தாயயென்றமையான் அவள் இடைநிலைப்பருவத்தாளானமையும் புத்தேளென்றமையான் அவள் இளமைப்பருவத்தாளானமையுங் கூறினாள். நகைமுகங் காட்டென்பாள் கண்ணீர்வீழ்ந்தது இப்புதல்வனாலுள்ள பயனை நுகர்ந்து இனிமையுறாது பயனில்லாப் புறத்தொழுக்கம் நிகழ்த்துகின்றமைகருதி. இது பரத்தையரில்லிற் புதல்வன் செல்லாமற் சிறைத்தது. இதனால், தலைவிக்கு இளிவும் தலைவற்கு அசைவும் பிறந்தது. இஃது ஐஞ்சீரடுக்கித் தனிச்சொற்பெற்று வந்த கலிவெண்பா. (17) (83.) | பெருந்திரு நிலைஇய வீங்குசோற் றகன்மனைப் பொருந்துநோன் கதவொற்றிப் புலம்பியா முலமர விளையவர் தழூஉவாடு மெக்கர்வாய் வியன்றெருவின் விளையாட்டிக் கொண்டு வரற்கெனச் சென்றா |
1. இந்நூற்பக்கம் 488 : 5 - ஆம் குறிப்புப்பார்க்க. (பிரதிபேதம்)1பரத்தமை யொன்றையும், 2 மார்பின்கண்ணே யணைய, 3கொண்டுவா வென்றால், 4 துறவாகிய 5துடக்கத்துத்.
|