யுளைவிலை, யூட்டலென் றீம்பால் பெருகு மளவெல்லா நீட்டித்த காரண மென்; கேட்டீ; 8 | பெருமடற் பெண்ணைப் பிணர்த்தோட்டுப் பைங்குரும்பைக் குடவாய்க் கொடிப்பின்னல் வாங்கித் தளரும் பெருமணித் திண்டேர்க் குறுமக்க ணாப்ப ணகனகர் மீடருவா னாகப் புரிஞெகிழ்பு நீல நிரைப்போ துறுகாற் குலைவனபோற் சாலகத் தொல்கிய கண்ண ருயர்சீர்த்தி யாலமர் செல்வ னணிசான் மகன்விழாக் | 15 | கால்கோளென் றூக்கிக் கதுமென நோக்கித் திருந்தடிநூ புரமார்ப்ப வியலி விருப்பினாற் கண்ணு நுதலுங் கவுளுங் கவவியார்க் கொண்மை யெதிரிய வங்கையுந் தண்ணெனச் செய்வன சிறப்பிற் சிறப்புச்செய் திவ்விரா | 20 | வெம்மொடு சேர்ந்துசென் றீவாயாற் செம்மா னலம்புதி துண்டுள்ளா நாணிலி செய்த புலம்பெலாந் தீர்க்குவே மன்னென் றிரங்குபு வேற்றானாத் தாய ரெதிர்கொள்ள மாற்றாத கள்வனாற் றங்கிய தல்லாற் கதியாதி யொள்ளிழா யான்றீ திலேன்; | 26 | எள்ளலான், அம்மென் பணைத்தோ ணுமர்வேய்ந்தகண்ணியோ டெம்மில் வருதியோ வெல்லாநீ தன்மெய்க்க ணந்தீஞ்சொ னல்லா ரணிந்த கலங்காட்டி முந்தை யிருந்து மகன்செய்த நோய்த்தலை வெந்தபுண் வேலெறிந் தற்றால் வடுவொடு தந்தையும் வந்து நிலை. |
இது விளையாட்டிக்கொண்டு வரற்குச் சேடியரோடு மகற்போக்கீய தலைவி அவன் நீட்டித்துவந்தவழி, "தாயர் கண்ணிய 1 நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை 2யுள்ளிய வகை'' (1)சிறைப்புறமாகக் கேட்டு வந்த தலைவனைக் கண்டு அவள்தன்னுள்ளே புலந்தது.
1.தொல். கற்பியல். சூ. 6. (பிரதிபேதம்) 1கல்லிசை, 2உள்ளியவழி, உள்ளியயனை.
|