பக்கம் எண் :

496கலித்தொகை

புதுமையை நுகர்ந்து பின்னர் எம்மை நினையாத நாணில்லாதவன் தந்த தனிமையெல்லாம் மிகவும் போக்குவேமென்று கூறி, இவனிடத்து விகுப்பத்தாலே அமையாத வேற்றுத்தாயர் எதிர்கொள்ள, அதனை 1மாற்றாத இக்கள்வனாலே ஆண்டுத் தாழ்க்க நின்றதன்றி, யான் வேறோர் தீதுடையேனல்லேன்; ஒள்ளிழாய்! என்னைக் கோபியாதேகொள்ளென்றாள் சேடி.
எ - று.

26 எள்ளலான், அம்மென் பணைத்தோ ணுமர்வேய்ந்த கண்ணியோ
டெம்மில் வருதியோ வெல்லாநீ தன்மெய்க்க
ணந்தீஞ்சொ (1) னல்லா ரணிந்த கலங்காட்டி
முந்தை யிருந்து மகன்செய்த நோய்த்தலை
(2) வெந்தபுண் வேலெறிந் தற்றால் வடுவொடு
தந்தையும் வந்து நிலை

எ - து : அதுகேட்டுப் 2புதல்வனை நோக்கி, ஏடா! அழகையுடைய மெத்தென்ற 3மூங்கில்போலுந் தோளினையுடைய நும்முடைய தாய்மார் சூடின கண்ணியோடே எம்முடையஇல்லிலே நீ வருவையோவாராயோவென வெறுத்துக்கூறி, தலைவன்வந்தமைகண்டு, முன்னேயிருந்து மகன் எமக்குச் செய்த நோய்க்குமேலே எம்மைமனத்தால் இகழ்ந்திருத்தலாலே தம் மெய்யிடத்துக் கிடந்த அழகிய இனியசொல்லையுடைய நல்ல மகளிர் அணிந்த கலங்களில் வடுவைக்காட்டி ஏனை வடுக்களோடே தந்தையும் வந்து நிற்றல், வெந்ததொரு புண்ணிலே வேலால் எறிந்த தன்மைத்தாயிருந்ததென அவனோடு புலந்து கூறினாள். எ - று.


தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலனென்றார் 'நகர் - பிள்ளையார் கோயிலென்றுமாம்' முருகு. 162, 176,222, 238 ; 'பிள்ளையாரால் வந்ததென முற்கூறி' மது. 611. என்பவற்றாலும் இவ்வழக்கு அறியலாகும்.

1. "ஒளிபூத்த நுதலாரோ டோரணிப் பொலிந்த" கலி. 66 : 19 - 20.

2. (அ) "வெந்தபுண் வேலெறிந்தற்றால்"(ஆ) "வெந்ததோர் புண்ணின்கண் வேல்கொண்டு நுழைப்பான் போல்" கலி. 84 : 29. 120 : 17.(இ) "வெந்துயர்க் கண்ணின் வேலிட்டதுபோல்"(ஈ) "தழலுறு புண்மேற் கருவி பாய்ந்தென" பெருங். (1) 33 : 95; (4) 13 : 130.(உ) "புண்செய் நோவில் வேலெறிந்தாற் போலும்" பெரிய. சிறுத்தொண்ட. 50.
(ஊ) "தீநுழை புண்ணில் வேல் செறித்த தென்ன" கந்த. குமார. 46. (எ) "வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான்" கம்ப. இராவணன்சோக. 10.(ஏ) "வெவ்வே லெறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியதோர், செவ்வேனுழைப் பவர் சீலமன்றோ" தஞ்சை. 113.(ஐ) "புண்ணி னூடெரி, யயி னுழைந் தாலென வலமந் தேங்கினாள்" நைடதம். நகர்நீங்கு. 8.

(பிரதிபேதம்) 1மாறாத, 2அப்புதல்வனை, 3அணைபோலும் தோளினையுடையதாய்ாமா.