15 | கால்கோளென் றூக்கிக் கதுமென நோக்கித் (1) திருந்தடிநூ புரமார்ப்ப வியலி விருப்பினாற கண்ணு நுதலுங் கவுளுங் கவவியார்க் கொண்மை யெதிரிய வங்கையுந் தண்ணெனச் (2) 1செய்வன சிறப்பிற் சிறப்புச்செய் திவ்விரா | 20 | வெம்மொடு சேர்ந்துசென் றீவாயாற் செம்மா (3) னலம்புதி துண்டுள்ளா நாணிலி செய்த புலம்பெலாந் தீர்க்குவே மன்னென் றிரங்குபு வேற்றானாத் தாய ரெதிர்கொள்ள மாற்றாத கள்வனாற் றங்கிய தல்லாற் கதியாதி யொள்ளிழா யான்றீ திலேன் |
எ - து :அதனைக்கேட்பாய்; பெரிய மடலையுடைத்தாகிய பனையினுடைய குடம்போலத் திரண்ட இடத்தையுடைத்தாகிய சர்ச்சரையையுடைய முகிழையுடைய பசியகுரும்பையைக் கொடியாற் கட்டிப் பின்னின பின்னலை இழுத்து அதனால் இளைக்குஞ் சிறிய பிள்ளைகளுக்குநடுவே பெரிய மணி யழுத்தின திண்ணிய தேரிலேயிருந்து அகன்ற மனையை நோக்கி மீளுதலைச் செய்வானாகாநிற்க. நீலத்தினுடைய முறுக்குநெகிழ்ந்து நிரைத்த பூக்கள் மிக்க காற்றுக்கு அசைவனபோலே சாளரங்களிலே ஒதுங்கிப் பார்த்த கண்ணினை யுடையார் பரந்த மிக்க புகழையுடைய ஆலின்கீழ் இருந்த இறைவனுடைய மகனாகிய (4) பிள்ளையார் திருநாளுக்கு அடிக்கொள்ளுகின்ற நாளென்று கருதி, 2வரவிலே முயன்று கடுகிவந்து பார்த்து, இவனாதலாற் றிருந்தின அடியிற் சிலம்பொலிப்ப அணுகி, நின் கண்ணாலும் 3நுதலாலும் கதுப்பாலும் நின்னைத் தழுவிய தாயர்க்கு விளக்கத்தைக்கொடுத்தலை ஏற்றுக்கொண்டிருக்கின்ற அழகிய கையினாலும் நின் தந்தைக்குத் 4தண்ணென நீ செய்யுஞ் சிறப்புக்கள் போலே எமக்குஞ் சிறப்புக்கள் செய்து இவ்விராக்காலத்து எம்மோடே தங்கிப்போதலைச் செய்யவேண்டும்; [சிறப்பாலே] தலைவா! எங்கள் நலத்தின்
1. இதனை ஐஞ்சீரடியாக்கலுமாம் உரையின் பிரதிபேதத்தால் 'கவுளும்' என்பதை நீக்கி விருப்பினாலென்பதை அடுத்த அடிஆக்கலுமாம். 2. தலைவன்றமரைக் கண்டவழி உவத்தலாகிற "அவன்றம ருவத்தல்" என்னும் மெய்ப்பாட்டிற்கு 'செய்வன சிறப்பிற்..........................தீர்க்கு வேமன்' என்பது மேற்கோள்; தொல்; மெய்ப்பாடு, சூ. 22. இளம். 3. "மாண மறந்துள்ளா நாணிலிக்கு" கலி. 12. 4. பிள்ளையாரென்றது, முருகவேளை; 'பிள்ளையார் அயனைச்சபித்தலின்' 'சித்தனென்பது பிள்ளையாருக்குத் திருநாமம்' 'பிள்ளையார்வேலைத் (பிரதிபேதம்)1செல்வன, 2வாயிலே, 3நுதலாலு நின்னை, 4கண்ணெனநீ.
|