பக்கம் எண் :

498கலித்தொகை

1அன்னையோ இஃதொன்று,
29 முந்தைய கண்டு மெழுகல்லா தென்முன்னர்
வெந்தபுண் வேலெறிந் தற்ற விஃதொன்று
தந்தை யிறைத்தொடி மற்றிவன் றன்கைக்கட்
டந்தாரியா ரெல்லாஅ விது;
33 இஃதொன்று, என்னொத்துக் காண்க பிறரு மிவற்கென்னுந்
தன்னலம் பாடுவி தந்தாளா நின்னை
யிதுதொடு கென்றவர் யார்;
36 அஞ்சாதி, நீயுந் தவறிலை நின்கை யிதுதந்த
பூவெழி லுண்க ணவளுந் தவறிலள்
வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார்
மேனின்று மெள்ளி யிதுவிவன் கைத்தந்தா
டான்யாரோ வென்று வினவிய நோய்ப்பாலேன்
யானே தவறுடை யேன்.

இது கடவுட் கடிநகர்தோறும் வலங்கொளீஇ வரற்குச் சேடியரோடு மகற்போக்கிய தலைவி அவன் நீட்டித்து வந்துழி, "தாயர் கண்ணிய 2நல்லணிப் புதல்வனை - மாயப் பரத்தை யுள்ளிய 3வழி" (1) யின்கண்,தந்தை தொடி மகன்கைக்கண்டு புலந்தாள் தன்னுள்ளே அழிந்து கூறியது.

இதன் பொருள்.


1. தொல். கற். சூ. 6. இச்சூத்திரப் பகுதிக்கு, 'தாயரைக்கிட்டிய நல்ல அணியையுடைய புதல்வனை மாயப்பரத்தை குறித்த வழியும் கூற்று நிகழும்; புதல்வனைப் பரத்தைமை குறித்தலாவது தலைவன் புறப்பெண்டிர் மாட்டுப்போகிய வழி வெகுளுமாறுபோலப் புதல்வனையும் அவரிடைச் சென்றவழி வெகுளல்; கண்ணிய நல்லணி யெனவே அவர்கொடுத்த நல்லணியென்பது பெறுதும்; பரத்தைமை உள்ளாத வழி இவண்மாட்டுக் குறிப்புநிகழாதாம்; மாய மென்பது பரத்தைமைக்குப் பண்பாகி இனஞ் சுட்டாது வந்தது' என்று கூறி, அதற்கு இச்செய்யுளை மேற்கோள் காட்டினர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும் இச்சூத்திரப்பகுதியில், "அவருள்(தாயருள்) துனியாலே வருந்திய பரத்தையர் தம் வருத்தத்தினை உணர்த்தியும், தலைநின்றொழுகும் பரத்தையர் தம் சிறப்புணர்த்தியும் அணிவ ரென்றற்கு, 'கண்ணிய' என்றார்" என விசேடவுரை எழுதி, இச்செய்யுளை இதற்கே மேற்கோள் காட்டியுள்ளார்.

(பிரதிபேதம்) 1'அன்னையோ முந்தையன' என, தொல். கற். சூ. 6. இள. உரையிலுள்ளது, 2நல்லிசைப், 3 வகையின்கண்.