பக்கம் எண் :

மூன்றாவது மருதம்499

(1) உறுவளி தூக்கு முயர்சினை (2) மாவி
னறுவடி யாரிற் றவைபோ லழியக்
கரந்தி 1யா (3) னரக்கவுங் கைநில்லா வீங்கிச்
சுரந்த (4) வென் மென் 2முலைப் பால்பழு தாகநீ
5நல்வாயிற் போத்தந்த 3பொழுதினா னெல்லா
கடவுட் கடிநகர் தோறு மிவனை
வலங்கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை
யீர மிலாத விவன்றந்தை பெண்டிருள்
யாரிற் றவிர்ந்தனை கூறு

எ - து: ஏடீ! நீ நல் 4வாயிலினின்றும் போதலைச்செய்த காலத்தின் கண்ணே தெய்வங்களையுடையதாகிய மிகுதிகளையுடைய கோயில்கடோறும் இவனை வலஞ்செய்வித்து வாவென்று யான் கூறச் சென்ற நீ யான் கூறிய கூற்றினைத் தப்பினாய்; இனி மாவினுடைய உயர்ந்த கொம்புகளினின்றமிக்க காற்றால் அசைக்கும் நறிய (5) வடுக்கள் காம்பு முறிந்தனபோலே பால் மிகக் குதிக்கையினாலே அதனைமறைத்து 5யான் அங்கையால் அமுக்கித் தேய்க்கவும் அந்தக் கையினெல்லையில் நில்லாவாய் விம்மிச் சுரந்த என்னுடைய மெல்லிய முலையிற் பால் பிள்ளை உண்ணாமற் பாழேபோம்படி அருளில்லாத இவன் தந்தையுடைய பரத்தையர்களுள் யாருடைய இல்லிலே தங்கினாய்; சொல்லென்றாள். எ - று.


1. உறு என்னு முரிச்சொல் மிகுதியென்னும் பண்புணர்த்தி வருதற்கு இவ்வடி மேற்கோள். நன். உரி, சூ. 15. மயிலை; விருத்தி.இரா.

2. "நறுவடிமாவின்" (கலி. 41 : 14)என்பதும் அதன் குறிப்பும்பார்க்க.

3. "அரக்க நில்லா கண்ண நீர்கள்" நாலாயிர. நாச்சியார். 3 : 4.

4. (அ) "எம்முலை, பாலொடுவீங்கத் தவநெடிதாயினை, புத்தேளிர்கோட்டம் வலஞ்செய் திவனொடு, புக்க வழியெல்லாங் கூறு" (ஆ) "சென்றா, யுளைவிலை, யூட்டலென் றீம்பால் பெருகு மளவெல்லா, நீட்டித்த காரணமென்" கலி. 82 : 1 - 5. 83 : 4-6.

5. "முனித்தலைக் கண்ணி நெற்றிச் சிறார்முலை முழாலிற் பில்கிப்,புனிற்றுப்பால் பிலிற்றித் தேமா வடுவிறுத் தாங்குப் பாய,நுனித்துக் கண் ணரக்கி நோக்கா தொசிந்துநின் றார்க ளன்றே,கனிப் பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம் பொத்தார்"சீவக. 2541.

(பிரதிபேதம்)1 யான்காக்கவும், 2முலைபால் பழுதாக, 3போழ்தினான், 4வாசலிலே நின்றும், 5யாங்கையால்.