தங்கினான்; அதனாலே பின்னை அவர்கள் தம்முடைய தம்முடைய அணிகளில் இவன் வடிவிற்கு ஒத்தவையிற்றை 1ஆராய்ந்து (1) கைக்காணியென்று அணிந்தாரென்றாள்சேடி; அதுகேட்டதலைவி தனக்கு அயலாயிருக்கின்ற தந்தையுடைய பரத்தையர்கொடுத்தவையிற்றை இவனொருவன் 2வாங்குவா (2) னாம், இனி இவன் கைவிடப்படுமவன் அறுதியாக மிகவும் நம்மாற்கோபித்தல் தக்கானென நெஞ்சொடுகூறினாள்.எ - று. 'அடைமறை..................செம்மல்' என்றது: இலையும்பூவும்,குடைக்கும் புதல்வற்கும் உவமையாய் (3) விரவிநின்றது. இதுசினைக்கு முதல்வந்தது. 20 (4) சிறுபட்டி எ - து: காவலின்றி வேண்டியவா றொழுகுவாய். எ - று. ஏதிலார் கையெம்மை யெள்ளுபு நீதொட்ட மோதிரம் யாவோயாங்காண்கு எ - து: நீ எம்மை இகழ்ந்து இட்ட பரத்தையர் கையின் மோதிரங்கள் யாவை? யாம் அவற்றைக்காண்பேன். எ - று. யாங் காண்கு, பன்மையொருமை மயக்கம். யானும் 3பாடம். 22 அவற்றுள், (5) நறாவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச் (6) 4சுறாவே றெழுதிய (7) மோதிரந் தொட்டாள்
1. இந்நூற்பக்கம் 491: 4- ஆம் குறிப்புப்பார்க்க. 2. "ஒருவனா மானுட னோதை மாநகர், வருவனாம் விறன்மணி மானொடுஞ்சமர், பொருவனா மவனுயிர் பொன்ற வென்றிடர், தருவனாம்" வில்லி. மணிமான். 80: என்பது முதலியவற்றில் ஆமென்பது இவ்வாறே செறற்குறிப்பில் வந்திருத்தல் காண்க. 3. "அடைமறை.......................காணூஉ" என்பது உவமை பலபொருள் விரவி வந்ததற்கும் தொல். உவம. சூ, 2. இளம். முதற்குச் சினையுவமமாய் வந்ததற்கும் மேற்கோள்;தொல். உவம: சூ. 6.இளம்: பேர்; இ-வி. சூ.641. 4. "சிறுபட்டி" கலி. 51: 4 என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 5. "நறாஅவவிழ்ந் தன்னவென் மெல்விரற் போது" கலி. 54 : 9. 6. "அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம்" 7. (அ) "மணிநாம மோதிரந் தொட்டு" சீவக. 1040. (ஆ) மாதிரத்தமரேனையோரையும் வல்லை வென்றுதன் முத்திரை, மோதிரச்சுவடேற்றிறைஞ்சு முடித்து" விநாயக. சிந்தாமணிவிநாயகர். 71. (பிரதிபேதம்)1ஆய்ந்தாய்ந்து, 2 வாங்குவானாயினிவன், கைவிடப்படும்இவன் அறுதியாக, 3பாடம் நறவிதழ், 4சுறவேறெழுதிய.
|