| குறியறிந்தேன் காமன் (1) கொடியெழுதி யென்றுஞ் செறியாப்பரத்தை யிவன்றந்தை மார்பிற் பொறியொற்றிக்கொண்டாள்வ லென்பது தன்னை 1யறீஇயசெய்த வினை |
எ - து: அம்மோதிரங்களுள் 2நறாம்பூவைக் கண்டாற்போன்ற சிவந்த விரலுக்குப் பொருந்தச் சுறவிலேற்றைக் குழித்த மோதிரத்தை இட்டவளுடைய கருத்தை அறிந்தேன்; காமன்கொடியாகியமகரத்தை மோதிரத்தே 3குழித்தாற் போல வேறொன்றிலே அழுத்தி அதனை எந்நாளும் அடங்காத பரத்தைமைக்குணத்தையுடைய இவன் றந்தைமார்பிலே பொறியாக ஒற்றி அடிமைக்கொண்டு ஆண்டுபோதுவேனென்று சொல்கின்ற வார்த்தை தன்னை எனக்கு அறிவித்தற்குச் செய்ததொரு தொழிலெனப் புலந்து அவனொடு கூறினாள். எ - று. "கடல்வாழ் சுறவு மேறெனப்படுமே" என்றதனாற் (2) 4சுறவேறென்றார். பரத்தைமை பரத்தை யென 5நின்றது; "தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத்தையும்" (3) என்றார் ஆசிரியராகலின். அன்னையோ எ - து: நீயும் அத்தன்மையையோ! எ - று. புதல்வனாகிய நீயும் எம்மை இகழுந்தன்மையையோ 6என்றதாம். இது புதல்வனை நோக்கிக்கூறியது. இஃதொன்று, எ - து: இவ்விகழ்ச்சியும் நாமே செய்துகொண்டதொன்றென நெஞ்சொடு கூறினாள். எ - று. 29 | 7முந்தைய கண்டு மெழுகல்லா தென்முன்னர் (4) வெந்தபுண் வேலெறிந் தற்றா விஃதொன்று |
1. (அ) "வில்லா னிடுகொடி யகலம்" (ஆ) "ஆடுகொடி யணிந்தவுய ரலங்கல்வரை மார்பன்" சீவக. 2477, 2483. 2. தொல். மரபி. சூ. 40. பேர். 38. நச். இதனுரையில் சுறாவின் ஆண் ஏறெனப்படுதல் மரபென்பதற்கு, "சுறாவே றெழுதிய மோதிரந்தொட்டாள்"என்பது மேற்கோள். 3. தொல். கள. சூ. 20. 4. "வெந்தபுண் வேலெறிந் தற்றால்" (கலி. 83 : 30) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. (பிரதிபேதம்) 1அறியிய, 2நாாம்பூவை, 3குறித்தாற்போல, 4சுறாவேறென்றார், 5நிற்கும், 6என்றதாம் புதல்வனை நோக்கி இஃதொன்று. 7முந்தையனகண் டெழு.
|