பக்கம் எண் :

மூன்றாவது மருதம்503

(1) தந்தை யிறைத் 1தொடி மற்றிவன் றன்கைக்கட்
டந்தாரியா ரெல்லாஅ விது

எ - து: பின்னை என்முற்பட்டனவற்றைக் 2கண்டும் தலையெடுக்க மாட்டாத என்முன்னே வெந்ததோர் புண்ணிலே வேலாலே எறிந்த 3தன்மைத்தாக இஃதொன்று இவன்றந்தையுடைய முன்கையிற் றொடியை இவன் கையிடத்தே 4இட்டவர் யார்தான்? கூறென்றாள். எ - று.

33இஃதொன்று, என்னொத்துக் காண்க பிறகு மிவற்கென்னுந்
தன்னலம் பாடுவி 5தந்தாளா நின்னை
யிதுதொடு 6கென்றவர் யார்

எ - து அவன் 7கூறாமையின், ஏடா! இத்தொடி என்னைஒழிந்தவர்களும் இத்தலைவற்கு என்னையொழித்த வனப்பை வழிபடும்படியைக் காண்பார்களாக(?)வென்று கூறுந் தன் நலத்தை மிகுத்துப் புகழ்கின்றவளாயிருக்குந் தந்தவள். இவ்விகழ்ச்சியும் நாமே செய்துகொண்டதொன்றென நெஞ்சொடு கூறினாள்; கூறி, புதல்வனை நோக்கி நின்னை இத்தொடியை இடுகவென்று சொன்னவர் யார்தானென்று கூறினாள். எ - று.

36 அஞ்சாதி, (2) நீயுந் தவறிலை நின்கை யிதுதந்த
பூவெழி லுண்க ணவளுந் தவறிலள்
(3) வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார்
மேனின்று மெள்ளி யிதுவிவன் கைத்தந்தா

1. "தந்தை யிறைத்தொடி..................எல்லாவிது" என்பது, 'பல்வேறு புதல்வர்க் கண்டு நனியுவப்பினும்' என்புழி, தாயர்கொடுப் பப்புதல்வன் கொண்டமைக்கு மேற்கோள்; தொல். கற்பி. சூ. 10. நச். 4

2. "நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப், போதர விட்ட நுமருந் தவறிலர், நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப், பறையறைந் தல்லது செல்லற்கவென்னா, விறையே தவறுடையான்" (கலி. 56 : 30 - 34.) என்பதும் அதன் குறிப்பில் இவ்விடத்துக்குப் பொருந்துவனவும் நோக்குக.

3.வாளாதே யுவமஞ்செய்து உற்றது உணர்த்தாத வழியும் தெளியுமாறுஉண்டென்பதற்கு, "வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார்" என்பது மேற்கோள்; தொல். உவம. சூ. 20.

(பிரதிபேதம்) 1தொடீஇமற்றிஃதிவன், 2கண்டுதலை, 3தன்மைத்தாக விவன், 4இட்டவன் யார் தானெனன்க் கூறென்றாள், 5 தந்தாளோநின்னை, 6 என்றவள்யார், 7 கூறாமையின் இத்தொடி.