பக்கம் எண் :

504கலித்தொகை

டான்யாரோ வென்று வினவிய நோய்ப்பாலேன்
யானே தவறுடை யேன்.

எ - து: அவன் அதற்கு அஞ்சினமை கண்டு அஞ்சாதேகொள்; இதனைத் தொட்டுவந்த நீயுந் தவறுடையையல்லை; நின் கையிலே இத்தொடியையிட்ட பூவினது அழகையுடைய மையுண்கண்ணையுடைய பரத்தையுந் தவறுடைய ளல்லள்; (1) வேனிற்காலத்துப் புதுப்புனல்போல எல்லார்க்கும் பயன்படுகின்ற நுந்தையை ஈண்டு நோவாரில்லை; நமக்கு மேலாய்நின்றுந் தன்னலம்பாடிப் பின்னரும் நம்மை இகழ்ந்து இத்தொடியை இவன் கையிலிட்டவள் யாரோ வென்றுகேட்ட இந்நோயின் கூற்றேனாகிய யானேயன்றோ தவறுடையே னெனத் தன்னுள்ளே அழிந்து கூறினாள். எ- று.

இது, பரத்தை தன் (2) சிறப்பு உணர்த்தி அணிந்தமைகூறிற்று. 'மேனின்று மெள்ளி' என்றதற்கு, முற்காலந் 1தொடங்கி இகழ்ந்தென்றுமாம்.

இதனால், தலைவிக்கு எள்ளல் தோன்றிற்று.

இது தளைவிரவி ஐஞ்சீரடுக்கிவந்த கலிவெண்பா. (19)

(85.) காலவை, சுடும்பொன் வளைஇய வீரமை சுற்றொடு
பொடியழற் புறந்தந்த செய்வுறு கிண்கிணி;
3 உடுத்தவை கைவினைப் பொலிந்த காசமை பொலங்காழ்மேன்
மையில் செந்துகிர்க் கோவை யவற்றின் மேற்
றைஇய பூந்துகி லைதுகழ லொருதிரை;
6 கையதை, அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய
பலவுறு கண்ணுட் சிலகோ லவிர்தொடி;
8 பூண்டவை, எறியா வாளு மெற்றா மழுவுஞ்
செறியக் கட்டி யீரிடைத் தாழ்ந்த
பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின்
மையற விளங்கிய வானேற் றவிர்பூண்;
12 சூடின, இருங்கடன் முத்தமும் பன்மணி பிறவு மாங்
கொருங்குடன் கோத்த உருளமை முக்காழ்மேற்
சுரும்பார் கண்ணிக்குச் சூழ்நூ லாக

1. ஆன வேனிலின் மாந்தர்போ லலர்த்தடம் பொழிலுந், தானு மாடுதல் கருதியோ......................புனல்பரந் தொழுகியதால்" திருவானைக்.ஆரஞ்சாத்து. 20.

2. இந்நூற்பக்கம் 498: 1 - ஆம் குறிப்புப்பார்க்க.

(பிரதிபேதம்) 1துடங்கி.