பக்கம் எண் :

மூன்றாவது மருதம்505

வரும்பவிழ் நீலத் தாயிதழ் நாணச்
சுரும்பாற்றுப் படுத்த மணிமருண் மாலை;
17 ஆங்க, அவ்வும் பிறவு மணிக்கணி யாகநின்
செல்வுறு திண்டேர்க் கொடுஞ்சினை கைப்பற்றிப்
பைபயத் தூங்குநின் மெல்விரற் சீறடி
நோதலு முண்டீங் கென்கை வந்தீ
செம்மானின் பாலுண் ணிய;
22 பொய்போர்த்துப், பாண்டலை யிட்ட பலவல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கித்தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்த றொழிலாத் திரிதரு
நுந்தைபா லுண்டி சில;
26 நுந்தைவாய், மாயச்சூ டேறி மயங்குநோய் கைமிகப்
பூவெழி லுண்கண் பனிபரப்பக் கண்படா
ஞாயர்பா லுண்டி சில;
29 அன்னையோ, யாமெம் மகனைப்பா ராட்டக் கதுமெனத்
தாம்வந்தார் தம்பா லவரொடு தம்மை
வருகென்றார் யார்கொலோ வீங்கு;
32 என்பாலல், பாராட் டுவந்தோய் குடியுண் டீத்தையென்
பாராட்டைப் பாலோ சில;
34 செருக்குறித் தாரை யுவகைக்கூத் தாட்டும்
வரிசைப் பெரும்பாட்டொ டெல்லாம் பருகீத்தை
தண்டுவென் ஞாயர்மாட்டைப் பால்.

இது தலைவி தன் மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு 1ஊட்டுகின்ற வழிச் சிறைப்புறமாகக் கேட்டுப் புக்க தலைவனைக்கண்டு தன்னுள்ளே புலந்து புலவியோடுபின்னும் பாராட்டியது.

இதன் பொருள்.

(1) காலவை, சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு
பொடியழற் புறந்தந்த (2) 2செய்வுறு கிண்கிணி


1. இச்செய்யுளின் 1, 3, 6, 8, 12. இவ்வடிகளின்முதலிலும். பரி. 21 : 1, 3, 8, 10, 12. இவ்வடிகளின் முதலிலும் கூன்வந்திருத்தல் ஒப்புநோக்கற் பாலது.

2. "செய்வு" இந்நூற்பக்கம் 47 : 1 - ஆம் குறிப்புப்பார்க்க.

(பிரதிபேதம்) 1ஊட்டுவழி, 2செய்யுறு.