எ - து: செம்மால்! நின் (1) காலிற் கிடக்கின்றவை, 1சுடும்பொன்னாலே வளைத்த இரண்டாய் அமைந்த 2காற்சரியோடே பண்ணுதலைத் தான் உறுகின்ற, (2) பொடி மூடுதழலாலே நிறம் உண்டாகப்பட்ட 3சதங்கை. எ - று. (3) சுடுபொன், எக்காலமும் பொன்னென (4) முக்காலத்திற்கும் உரிய பொன்னின் இயல்பு கூறிற்று; சுடுபொன்னென வினைத்தொகையாகாமை உணர்க. 3 | உடுத்தவை, (5) கைவினைப் பொலிந்த காசமை பொலங்காழ்மேன் மையில் (6) செந்துகிர்க் கோவை யவற்றின் மேற் றைஇய பூந்துகி லைதுகழ 4லொருதிரை |
எ - து: (7) அல்குலிற்கு உடுத்தவை, கைத்தொழிலாலே பொலிவுபெற்ற மணிகள் இடையிடை அமைந்த பொன்மணிகளையுடைய வடம்; அதின் 5மேலே அழுக்கில்லாத சிவந்த பவளவடம்; அவற்றின் மேலே. 6உடுத்தின ஐதாய்க் கழல்கின்ற ஒன்றாகிய திரைத்த பூந்துகில். எ - று. வடங்கள் தோன்றத் 7திரைத்தாரென்றார்.
1. இந்நூற்பக்கம் 478 : 7 - ஆம் குறிப்புப் பார்க்க. 2. (அ) "நிறம்பெறப், பொடியழற்புறந்தந்த பூவாப்பூம் பொலன்கோதை" கலி. 54: 1 - 2. (ஆ) "ஒள்ளழற்புரிந்த தாமரை" (இ) "அழல்புரிந்த வடர்தாமரை" புறம். 11 : 16, 29 : 1. 3. "சுடுபொன்" ஐங். 432; பரி. 21 : 18. 4. தொல். 5. பவழக் காசொடு பன்மணி விரைஇத், திகழக் கோத்த செம்பொற் பாண்டில், கைவினைக் கொளுவிற் செய்துநலங் குயின்ற, வெண்ணாற் காழ்நிரை" பெருங். (2) 19 : 142 - 145. 6. (அ) "நுண்டுகி னுழைந்த வல்குற் பவளமொத்து" சீவக. 1184. (ஆ) "செந்துகிர்க் கோவை சென்றேந் தல்கு, லந்துகின் மேகலை யசைந்தன வருந்த" (இ) "அந்துகிர்க் கோவை யணியொடு பூண்டு" சிலப். 4: 29 - 30, 14: 93. (ஈ) "அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலா னென்கின் றாளால்" தேவாரம்....................(உ) "பவழஞ் சேர்ந்த பல்காழல் குலர்" பெருங். (1) 43 : 146. 7. (அ) "கொள்வீ ரல்குலோர் கோவணம்" தே....................... (ஆ) "துளிக்கு நெய்க் கருங்குழற் றோகைமாருயிர், விளிக்குமென் றல்குலை மறைத்த மேதகு, பளிக்குவெள் ளுடையின்மேற் பசும்பொனம்பரங், களிக்கும் வேன் மன்னவன் கவினச் சுற்றினான்" காஞ்சி. நகரேற்று. 200. (பிரதிபேதம்)1சுடுபொன் எக்காலமும்...........உணர்க சுடுபொன்னாலே, 2காற்கற்றையோடே, 3சதங்கைஉடுத்தவை, 4ஒருசிறை, 5மேலேவழுக்கில்லாத, 6உடுத்தினவை ஐதாய், 7திரைத்தார்கையதை.
|