6 | கையதை, அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய பலவுறு கண்ணுட் சிலகோ லவிர்தொடி |
எ - து: கையிடத்தது, ஞெண்டின்கண் தன்மைபெற நெருங்கப் பல அருப்புத்தொழில் சூழப்பட்ட சில கோற்றொழில் அவிர்கின்ற இரண்டாய்ச் சேருந் தொடி. எ - று. (1) கண்ணுள் - தொழில். 8 | பூண்டவை, எறியா வாளு மெற்றா மழுவுஞ் செறியக் கட்டி யீரிடைத் தாழ்ந்த பெய்புல (2) மூதாய்ப் புகர்நிறத் துகிரின் மையற விளங்கிய (3) வானேற் றவிர்பூண் |
எ - து: பூணப்பட்டவை, வெட்டாத வாளும் வெட்டாத மழுவும் நெருங்கக் கட்டி இரண்டு புறத்தினுந் தங்கின மழைபெய்த 1புலத்து ஈயன்
1. (அ) "கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய, நுண்வினைக் கொல்லர்" சிலப். 16 : 105 - 106. (ஆ) "கண்ணு ளாளர் கைபுனை கிடுகும்" பெருங்.(5) 9 : 30. எனவருதல்காண்க. (இ) கண்ணுளென்பது சித்திரமெழுதுதலும் கூத்தாடுதலுமாகிய கண்ணுள் நிறுத்தும் தொழிற்றிறத்திற்கும் பெயராம். 2. (அ) "தண்பெய லெழிலி, யணிமிகு கானத் தகன்புறம் பரந்த, கடுஞ்செம் மூதாய்" நற். 362 : 3 - 5. (ஆ) "தண்பெயல் பொழிந்த பைதுறு காலைக், குருதியுருவி னொண்செம் மூதாய், பெருவழி மருங்கிற் சிறுபல வரிப்ப" அகம். 74: 3 - 5, எனவும் (இ) "அரக்கு நிற வுருவி னீயன் மூதாய்" அகம். 139 : 13. (ஈ) "ஈயலின் மூதாய் பரப்ப வினமரீஇக், கோவல ரூதுங் குழலிரங்கக் - கோவந், தவழக்கார் செய்தன்று" நாற்கவி. சூ. 170. மேற்கோள.் எனவும் (உ) "அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக், காயாஞ் செம்ம றாஅய்ப் பலவுட, னீயன் மூதாய் வரிப்பப் பவளமொடு, மணிமிடைந் தன்ன குன்றம்" (ஊ) "மணிமிடை பவளம் போல வணிமிகக்காயாஞ் செம்ம றாஅய்ப் பலவுட, னீயன் மூதா யீர்ம்புறம் வரிப்பப், புலனணி கொண்ட காரெதிர் காலை" (எ) "பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச், செறிமண னிவந்த களர்தோன் றியவிற், குறுமோட்டு மூதாய் குறுகு றோடி, மணிமண்டு பவழம் போலக் காயா, வணிமிகு செம்ம லொளிப்பன மறையக், கார்கவின் கொண்ட காமர் காலை" அகம். 14 : 1 - 4, 304 : 13 - 16, 374 : 10 - 15. எனவும் வருவன காண்க. 3. (அ) "மருப்புப்பூண்" (ஆ) "பொலஞ்செய் மழுவொடு வாளணி கொண்ட, நலங்கிள ரொண்பூண்" கலி. 82 : 12; 86 : 3 - 4. (பிரதிபேதம்)1புலத்தின் மூதாயினது.
|