பக்கம் எண் :

மூன்றாவது மருதம்509

அணியாகத் தூங்கும் நின்னென்க. தேர்க்குத் தாமரை (1)சினையாதலின் அதனைச் சினையென்றார்.

22 பொய்போர்த்துப், பாண்டலை யிட்டபலவல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கித்தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்த றொழிலாத் திரிதரு
(2) நுந்தையா 1லுண்டி சில

எ - து: தலைமேல் ஏறட்டுக்கொண்ட பாண்மையாலே வஞ்சனையை மறைத்து வசீகரித்தற்றொழில் பலவும் வல்ல பாணனைத் தூண்டிலாகப் போகட்டுப் பரத்தையரை அகப்படுத்தித் 2தான் விரும்பின பரத்தையருடைய நெஞ்சம்தன்வசமாக்குதல் தனக்குத் தொழிலாகக்கொண்டு திரியும் நுந்தைக்குப் பட்ட சிலகூற்றை உண்பாய். எ - று.

26 நுந்தைவாய், மாயச்சூ டேறி மயங்குநோய் கைமிகப்
பூவெழி லுண்கண் பனிபரப்பக் கண்படா
ஞாயர்பா 3லுண்டி சில

எ - து: நுந்தை வாயிற் பொய்ச்சூளை மெய்யாகத் தெளிந்து பூவினது அழகையுடைய உண்கண் நீர் பரக்கும்படியாக மயங்குகின்ற நோய் கைகடத்தலாலே அக்கண்கள் துயிலாத நின் தாய்மார்க்குப்பட்ட சில கூற்றை உண்பாய். எ - று.

29 அன்னையோ,
அன்னையோவென்றது, அம்மையோவென ஒரு வியப்பு.

1. 'கொடுஞ்சினைக் கைப்பற்றி' என்று ககரவொற்று மிக்கபாடம் காணப்படின், "கொடுஞ்சினத்தேரும்" பெருங். (1)49. 57. என்புழிப்போல, 'கொடுஞ்சு' என்பதையே தாமரைமொட்டின் பெயராக்கலுமாம். இப்பொருளில் 'கொடிஞ்சி, என்ற சொல்லே பெருவழக்கிற் றாயினும், அச்சொல் 'கொஞ்சி' என்று (புறம். 77 : 5. 368 : 4. சிலப். 14 : 168; 26 : 132. 213; 27 : 37; மணி. 4 : 48) இவற்றிற் காணப்படுதலால் இடையிகரம் உகரமாய்த் திரிந்துவழங்குதலும், 'கொடிஞ்சு' என்று (சூளா. அரசியல். 90, 273; கம்ப. குக. 51, கரன்வதை. 149, தேரேறு. 43) இவற்றில் வந்திருத்தலால் ஈற்றிகரம் குற்றியலுகரமாய்த் திரிந்துவழங்குதலும் உண்டென்பது விளங்கும். இத்திரிபுகளோடு பரிதிமுதலியவற்றில் இடையிகரம் உகரமாயும் பஞ்சிமுதலியவற்றில் ஈற்றிகரம் குற்றியலுகரமாயும் திரிந்துவழங்குதலை ஒப்பு நோக்குக. இச்சொல் தேர்த்தட்டுக்கும் பெயராய் வரும்.

2. இந்நூற் பக்கம். 349: 2 - ஆம் குறிப்புப் பார்க்க.

(பிரதிபேதம்) 1உண்டுசில, 2தாம்விரும்பின, 3உண்டுசில.