| (1) யாமெம் மகனைப்பா ராட்டக் கதுமெனத் தாம்வந்தார்தம்பா லவரொடு தம்மை வருகென்றார் யார்கொலோவீங்கு |
எ - து: வாராத தலைவன் வந்தமை கருதி, யாம் எம்முடைய மகனைப் பாராட்டாநிற்கத் தம் பகுதியிலுள்ள பாணன்முதலியோருடனே தாம் கடுக வந்தார்; தம்மை இவ்விடத்து வருகவென்று கூறினார் யார்தானெனத் தன்னெஞ்சொடு கூறினாள். மேல், பிள்ளையைநோக்கிக் கூறுகின்றாள். 32 | என்பாலல், பாராட் டுவந்தோய் குடியுண் டீத்தை (2) யென் பாராட்டைப் பாலோ சில |
எ - து:என்னுடைய குடியின்பகுதியிடத்தன அல்லவாகிய பாராட்டுக் கேட்டு மகிழ்ந்தவனே! எனக்குப்பட்ட கூற்றை யுண்பாய்; அப்பால்தான் சிறிது காணென்றாள். எ - று. (3) செருக்குறித் தாரை யுவகைக்கூத் தாட்டும் வரிசைப் பெரும்பாட்டொ டெல்லாம் பருகீத்தை தண்டுவென் 1 (4) ஞாயர்மாட்டைப் பால் 2எ - து: அவன் அதனை உண்ணாமற்போகலிற் கோபிக்கக்கருதின அன்னை, தன் பிள்ளையாட்டால் மனமகிழ்ச்சி செய்தவனை நோக்கிக் கோபிக்கக் கருதினவர்களை உவகையாகிய கூத்தாட்டுவிக்கும் உன்னுடைய தாகத்தாலே
1. ஆறாம் வேற்றுமைக்கு உரித்தென்றோதிய முறைப் பொருட்கண், உயர்திணைப் பொருள் இரண்டு சேர்ந்த விடத்து நிலைமொழி யீற்றில் உருபு விரிப்புழி, குகரம் வரும்; அதுவன்றி ஆறாம் வேற்றுமையை விரிப்புழி, அதுவென் னுருபுகெட அதன் உடைமைப் பொருள் விரியும்; என்று கூறி, "யாமெம்மகனைப் பாராட்ட" என்பதை மேற்கோள் காட்டி, இது உருபு நிலைக்களத்துப் பொருண் மயங்கிற்றென்றும், இதற்கு நான்க னுருபு விரிப்பின் எமக்கு மகனாகியவனையென ஆக்கங்கொடுத்துக் கூறல் வேண்டுமென்றும் கூறுவர், நச்சினார்க்கினியர்; தொல். வேற்றுமைமயங்கு. சூ. 11. 2. "அழுதகண் ணீர்கண் மைந்த னாவிபோழ்ந் திட்ட வன்றே" என்பதன் விசேடவுரையில் நீர்களென்றதனை, "என் பாராட்டைப்பாலோ சில" என்றாற்போலக் கொள்க வென்பர், நச்; சீவக. 2087. 3.முன்பதிப்பில் அடிப்பிரிப்பு வேறாகவுள்ளது. 4. "ஞாயர்" கலி. 81: 12; "ஞாயையு மஞ்சுதி" கலி. 107 என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. (பிரதிபேதம்)1ஞாயர்பாட்டைப், 2ஏ - து : அஃது அவனை உண்ணாமற்.
|