பக்கம் எண் :

மூன்றாவது மருதம்511

இனி யான் பாராட்டும் பெரிய பாட்டுக்களோடு நின் தாய்மாருக்குப்பட்ட கூற்றையுடைய பாலைப்பருகு; இத்தையெல்லாம் நின்னை 1ஊட்டல் அமைவேனென்று (1) கூறிட்டு ஊட்டினாள். எ - று.

தண்டுதல் அமைதலென்னும் பொருடருதல், (2) தண்டாமையென்னும் அதன் மறையால் உணர்க; "தண்டாக்காற் றளரியல்" (3) "தண்டாவிருப்பினள்" (4) எனவரும். 2ஞாயரென்றது தன்னைப் பிறர்போற் கூறிற்று.

(இதனால்) தலைவிக்குத்தலைவனைக்கண்டுபுதுமைபற்றி வியப்புத்தோன்றிற்று. தலைவற்கு 3நினைத்தல் பிறந்தது. புதல்வனால் தலைவிக்குச் செல்வமாகிய உவகை பிறந்தது; (5) புதல்வனுஞ் செல்வமாதலின்.

இது "தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்தும்" என (6) 4இடைநிலைப்பாட்டினை ஈற்றின் வைத்தமையால், (7) தரவும் போக்குமின்றி இடை நிலைப்பாட்டுக்களே ஐஞ்சீரடுக்கிவந்து கலிவெண்பாவிற் கூறிய உறுப்பொத்து யாப்புவேறுபட்டு வந்த கொச்சகம் . (20)

(86.) மைபடு சென்னி மழகளிற் றோடைபோற்
கைபுனை முக்காழ் கயந்தலைத் தாழப்
பொலஞ்செய் மழுவொடு வாளணி கொண்ட
நலங்கிள ரொண்பூ ணனைத்தரு மவ்வாய்
5 கலந்துகண் ணோக்காரக் காண்பின் றுகிர்மேற்
பொலம்புனை செம்பாகம் போர்கொண் டிமைப்பக்
கடியரணம் பாயாநின் கைபுனை வேழந்
தொடியோர் மணலி னுழக்கி யடியார்ந்த

1. "பால்பெய் வள்ளஞ் சால்கை பற்றி, யென்பா டுண்டனை யாயி னொருகா, னுந்தை பாடு முண்ணென் றூட்ட" அகம். 219 : 5 - 7.

2.இவர் இவ்வாறாகப் பொருள், கொள்ளு முறைமையை, "எய்யாமையே யறியாமையே" (தொல். உரி. சூ. 44) என்பதற்கு இவர்கூறியிருக்கும் விசேடவுரையாலும்அறிக.

3. 4.

5. (அ) "தம்பொரு ளென்பதம் மக்கள்" குறள். 63. எனவும் (ஆ) "பொன்போற் புதல்வனொடு" ஐங். 265.
(இ) "பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்" புறம். 9 : 4. எனவும் வருதல்காண்க.

6. தொல். செய். சூ. 154.

7. தரவும் போக்குமின்றிக் கொச்சகம் பலதொடர்ந்து இற்றதற்கு, இச் செய்யுளை மேற்கோள்காட்டி உறழ் பொருட்டு அன்மையிற் கொச்சகக் கலியாயிற் றென்பர். பேராசிரியர் நச்சினார்க்கினியர், இருவரும்; தொல். செய். சூ. 155.

(பிரதிபேதம்)1ஊட்டாமல்விடுவேனென்று, 2தாயென்றது தன்னைப்பிறள்போற்கூறினாள் இது தலைவிக்கு, 3நினைதல் பிறந்தது, 4இடைநிலைப்பாடனவை யீற்றீன்.