பக்கம் எண் :

512கலித்தொகை

தேரைவாய்க் கிண்கிணி யார்ப்ப வியலுமென்
போர்யானை வந்தீக வீங்கு;
11 செம்மால், வனப்பெலா நுந்தையை யொப்பினு நுந்தை
நிலைப்பாலு ளொத்த குறியென்வாய்க் கேட்டொத்தி
கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
வென்றிமாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி
யொன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோன்
மென்றோ ணெகிழ விடல்;
17 பால்கொள லின்றிப் பகல்போன் முறைகோடாக்
கோல்செம்மை யொத்தி பெருமமற் றொவ்வாதி
கால்பொரு பூவிற் கவின்வாட நுந்தைபோல்
சால்பாய்ந்தார் சாய விடல்;
21 வீத லறியா விழுப்பொரு ணச்சியார்க்
கீதன்மாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி
மாதர்மென் னோக்கின் மகளிரை நுந்தைபோ
னோய்கூர நோக்காய் விடல்;
ஆங்க;
26 திறனல்ல யாங்கழற யாரை நகுமிம்
மகனல்லான் பெற்ற மகன்;
28 மறைநின்று, தாமன்ற வந்தீத் தனர்;
ஆயிழாய், தாவாத வெற்குத் தவறுண்டோ காவாதீங்
கீத்தை யிவனையாங் கோடற்குச் சீத்தையாங்
கன்றி யதனைக் கடியவுங் கைநீவிக்
குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்குத்
தந்தை வியன்மார்பிற் பாய்ந்தா னறனில்லா
வன்பிலி பெற்ற மகன்.

இது "தந்தைய ரொப்பர் மக்களென் பதனா, லந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்" (1) என்பதனான் மகனைத் தலைவனை ஒக்க


1. தொல். கற்பி. சூ. 6. இச்சூத்திர வுரையில் "வனப்பெலா.................... நெகிழவிடல்" என மகனைக்கொண்டு விளையாடியவழி, அவன் தலைவன் மேல் வீழ்தலில், "தந்தை வியன்மார்பிற்.....................மகன்" எனத் தன்றிறத்து அன்பிலனென நெருங்கிக்கூறியவாறு காண்கவென்பர், நச்.