பக்கம் எண் :

மூன்றாவது மருதம்513

லாங் குணனும் ஒக்கலாகாக் குணனும் தலைவி கூறுகின்றுழி மறைந்துபுக்க தலைவன் அவள் ஊடலுணர்வன சொல்ல, மகன்வாயிலாக ஊடறீர்வாள் தன்னுள்ளே கூறியது.

இதன் பொருள்.

(1)மைபடு சென்னி மழகளிற் றோடைபோற்
கைபுனை (2) முக்காழ்கயந்தலைத் தாழப்
பொலஞ்செய் மழுவொடுவாளணி கொண்ட
நலங்கிள ரொண் (3) பூ ணனைத்தருமவ்வாய்
5கலந்துகண் ணோக்காரக் 1காண்பின்றுகிர்மேற்
பொலம்புனை (4) செம்பாகம்போர்கொண் டிமைப்பக்
(5) கடியரணம் பாயாநின் கைபுனைவேழந்
தொடியோர் மணலி னுழக்கி யடியார்ந்த

1. (அ) "அஞ்சன மெழுதின................குஞ்சரம்" (ஆ) "மையணி மதயானை" சீவக. 2230, 2434. (இ) "மையணி யிரும்பிடி" (ஈ) "மையணி யானை" (உ) "மையணி வேழமும்" (ஊ) "மையணி யுயர் நுத, லிருங்களிற்றியானை" பெருங். (1) 48 : 184, 55 : 134; 56 : 133; (2) 12 : 37; (3) 22 : 199 - 200. (எ) "இழையஞ் சனமால் களிறு" கம்ப. அதிகாயன். 21.

2. "முக்காழ்" (கலி. 85: 13) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

3. "அவ்வாய் தன், மெய்பெறா மழலையின் விளங்குபூ ணனைத்தர" கலி. 81 : 1 - 2. என்பதும் இந்நூற்பக்கம். 479 : 6 - ஆம் குறிப்பும் பார்க்க.

4. "செம்பாகம்" குறள். 1092.

5. (அ) "நீண்மதி லரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து, வைந்நுதி மழுகிய தடங்கோட் டியானை" (ஐங். 444) (ஆ) "எழூஉப்புறந்தரீஇப் பொன்பிணிப் பலகைக், குழுஉநிலைப் புதவிற் கதவுமெய் காணிற், றேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி, வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுத, லேந்துகை சுருட்டித் தோட்டி நீவி, மேம்படு வெல்கொடி நுடங்கத், தாங்க லாகா வாங்குநின் களிறே" பதிற். 53 : 15 - 21. என மெய்யாகிய யானையையும் (இ) "கவழ மறியாநின் கைபுனைவேழம்" (கலி. 80 : 6) எனப் பொய்ம்மையானையையும். கூறியிருத்தலும்
(ஈ) "கொய்யுஞ் சுவற்பரி யுங்குலப் பாகுமுட் கோலு மில்லா, வையங் கடவு மதகளி றேவருந் தாமலெங்கை,
செய்யும் பெருந்தவ மேகலந் தாருழைத் தீமையையும், பொய்யுங் கலாதொழி வாய்புன லூரனைப் போலவின்றே" அம்பிகாபதி. 504.என்பதும் ஈண்டு அறிதற் பாலன.

(பிரதிபேதம்)1காண்மின் றுகின்மேற்.