தேரைவாய்க் கிண்கிணி யார்ப்ப வியலுமென் போர் (1) யானை (2) வந்தீக வீங்கு
1. (அ) "காதற் சொல் யானையென ஒப்புமை கருதாது காதல் பற்றி வருவது; காதல் பற்றிச் சிறுவனை யானையென்றலும் ஆகுபெயராமன் றோவெனின்;-யாதானுமோ ரியைபுபற்றி ஒன்றன்பெய ரொன்றற் காயது ஆகுபெயராம்; இயைபு கருதாது காதன் முதலாயினவற்றான் யானை யென்றவழி ஆகுபெயருளடங்கா வென்பது. ஒன்றன்பெயர் ஒன்றற்காத லொப்புமையான் ஆகுபெய ரென்பாரு முளர்" என்பர் சேனாவரையர்; (ஆ) நச்சினார்க்கினியர், காதற் சொல் யானை வந்தது என ஒப்பின்றிக் காதல் பற்றி நிற்கும் என்று கூறி, "போர்யானை வந்தீக வீங்கு" என்பதை மேற்கோளும் காட்டுவர், தொல். கிளவி. சூ. 57. (இ) உயர்திணை அஃறிணையாகி ஒப்புமை கருதாது உவப்பின்கண் திணைமயங்கி வந்ததற்கு, "என்போர் யானை வந்தீக வீங்கு" என்பதை மேற்கோள் காட்டுவர், இ - வி. நூலார்; இ - வி. சூ. 299. (ஈ) ஒருவனை என் யானை வந்தது என்பது உவப்பினால், திணை மயங்கிற்றென்பர், மயிலைநாதர்; நன். பொது. சூ. 28. இவைகளும் (உ) "உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை" தொல். உவம. சூ. 3. என்னுஞ் சூத்திர வுரையில் "உள்ளுங்காலை என்றதனான் முன்னத்தி னுணருங் கிளவியான் உவமங்கோடலும், இழிந்தபொருள் உவமிப்பினும் உயர்ந்த குறிப்புப்படச் செயல்வேண்டு மெனவுங்கொள்க. அவை 'என்யானை' 'என்பாவை' என்றவழி அவை போலும் என்னுங் குறிப்புடையான், பொருள் கூறிற்றிலனாயினும், அவன்குறிப்பினான் அவை வினையுவமையெனவும் மெய்யுவமையெனவும்படும்; இவற்றுக்கு நிலைக்களம், காதலும் நலனும் வலியு மென்பது சொல்லுதும்; அவைபற்றாது சொல்லுதல் குற்றமாகலின்" என்று காணப்படுங் குறிப்பும் இங்கே அறிதற் பாலன. (ஊ) "மாதர், வருகவென் களிறென்றேத்தி வாங்குபு தழுவிக் கொண்டாள்" சீவக. 1911. (எ) "இன்றுணை மகளிரோ டொன்றியான் விடுதருஞ், சொல்லொடு படுத்துச் செல்கவென் களிறென" பெருங். (1) 36 : 346 - 7. (ஏ) "அன்னை பொருகளிறு வருகவளர் போரேறு வருகவெழிற் பூவை வண்ண, வருகவெனத் துகிரில்விளை மணிமுத்தங் கொண்டனளுண் மகிழ்வு பூத்தாள்" பாக. 10: சகடமுதைத்த. 21. எனவருதலும் காண்க. 2. (அ) வந்தீக வென்பதனோடு "வினைகலந்து வென்றீக" குறள். 1268.(ஆ) "யார்மேற்றாக் கொள்ளினுங் கொண்டீக" (இ) "என்செய்தேயாயினு முய்ந்தீக" பழ. 231; 384. என்பவை ஒப்புநோக்கற் பாலன.
|