பக்கம் எண் :

மூன்றாவது மருதம்515

எ - து: பட்டத்தையுடைய இளையகளிற்றினது கருமை 1யுண்டாகின்ற தலையில் நாலுகின்ற மூன்று வடம்போலே கையாற் புனைந்த மூன்று வடம் மென்மையையுடைய தலையிடத்தே தாழ, (1) பொன்னாற் செய்த மழுவோடே வாளம் அணிதலைக்கொண்ட நன்றே விளங்குகின்ற ஒள்ளிய பூனை நனைத் தலைச் செய்யும் அழகிய வாயைக் கண் கலந்த நினை வேட்கைநுகரக் 2காட்சி யினிய பவளப் பலகைமேலே (2) செம்பாதி வடிவு வேறோர் யானையை இறக் குத்துகின்ற போர்த்தொழிலைத் தன்னிடத்தே கொண்டு விளங்கும்படியாகப் பொன்னாற் செய்த, காவலையுடைய அரணங்களைக் குத்தாத கையாற் புனைந்த நின் வேழத்தோடே, நின்னடியில் நிறைந்த (3) தேரையின் வாய்போலும் வாயையுடைய சதங்கை ஆரவாரிப்ப, (4) தொடியினையுடைய மகளிர் இழைத்த வண்டலின் கண்ணே உழக்கி நடக்கும் என்னுடைய போர்த்தொழிலையுடைய யானை! இவ்விடத்தே வருக. எ - று.

3பொலம்புனைவேழமென்க. உழக்கியியலுமென்க.

11 செம்மால், வனப்பெலா நுந்தையை யொப்பினு நுந்தை
நிலைப்பாலு ளொத்த குறியென்வாய்க் கேட்டொத்தி

1. இங்கே கூறிய பிள்ளைப்பணி, திருமாலின் ஐம்படைகளின் வடிவமான தாலியேயன்றி இறைவன் படை வடிவமான தாலிபோலும். "பூண்டவை, எறியாவாளு மெற்றா மழுவுஞ், செறியக் கட்டி யீரிடைத் தாழ்ந்த, பெய்புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின், மையற விளங்கிய வானேற் றவிர்பூண்" கலி. 85 : 8 - 11. என முன் வந்திருத்தலும் காண்க.

2. "சம்பாதி யருச்சிப்பத் தம்பிசடா யுவும்பரவச், செம்பாதி யவள் வணங்கத் திருப்பாத மளித்தனையே" புள்ளிருக்குவேளுர்க்கலம். 1.

3. இது மெய்யுவமம்; வாயென்றது வாயினொலியைக் குறிப்பதாகக் கொள்ளின் வினையுவமமாம். (அ) "தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடி" (ஆ) "தவளைக் கிண்கிணித் தாமம்" சீவக. 243, 3126. (இ) "அரிக்குரற் கிண்கிணி யரற்றுஞ் சீறடி".................. (ஈ) "அரிப்பொற் கிண்கிணி யார்ப்ப" (உ) "தவளைக் கிண்கிணி ததும்புசீ றடியர்" (ஊ) "தவளையங் கிண்கிணிச் சேவடி" பெருங். (1) 40 : 18, 46 : 246. (3) 9 : 167 - 8. (எ) "தவளையங் கிண்கிணித் தாளும்" கூர்ம. கல்யாண. 28. (ஏ) "தவளைவாய்ச் சதங்கை" காசி. பஞ்சநதத். 3. (ஐ) "தவளைவாய்ச் செம்பொற் கிண்கிணி" சீகாளத்தி. நான்முக. 26. என்பவைகளும் இந்நூற்பக்கம் 478 : 7 -ஆம் குறிப்பும் இங்கே அறிதற் பாலன.

4. இந்நூற்பக்கம் 158 : 2 - ஆம் குறிப்புப் பார்க்க.

(பிரதிபேதம்)1உண்டாகின்ற ஒள்ளியபூணை, 2காணும் இனியபவளப், 3புலம்புனை.