| கால்பொரு பூவிற் கவின்வாட நுந்தைபோல் சால்பாய்ந்தார் சாய விடல் |
எ - து: பெருமா! (1) நுகத்துப் பகலாணிபோல் ஒருபக்கத்தைக் கொள்ளுதலின்றி (2) முறைமைசெய்தற்குச் சாயாத கோல் செவ்விதாக நிகழ்த்துதலில் அவனை ஒப்பாய்; மற்றுள்ள குணங்களில், தன்னுடைய அமைதிக்குணத்தாலே இவன் நம்மைத் தப்பானென்று ஆராய்ந்த மகளிரைக் காற்றுப் பொருகின்ற பூப்போலே அழகுகெடும்படி நுந்தை சாயவிடுமாறு போலச் சாயவிடுதலாகிய 1பரத்தைமையை ஒவ்வாதேகொள். எ - று. 21 | (3) வீத லறியா விழுப்பொரு (4) ணச்சியார்க் (5) கீதன்மாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி (6) மாதர்மென் னோக்கின் மகளிரை நுந்தைபோ னோய்கூர நோக்காய் விடல் |
எ - து: பெருமா! தன்னையுடையார் கெடுதலன்றித் (7) தானே கெடுதலறியாத சீரிய பொருளை நச்சினவர்களுக்குக் கொடுத்தலிடத்து அவனை
1. (அ) "நெடுநுகத்துப் பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர்" பட். 206 - 207; (ஆ) "நுகத்துப் பகலாணி போன்று" பழ. 95. (இ) "நுகத்திற் பகலனையாய்" தஞ்சை. 48. 2. "ஓர்வுற் றொருதிற மொல்காத நேர்கோ, லறம்புரி நெஞ்சத் தவன்" கலி. 42 : 14 - 5. 3. "வீதலறியா..........................விடல்" என்பது தந்தையரொப்பர் மக்களென்பதனால் மகப்பழித்து நெருங்கும் தலைவிகூற்றுக்கு மேற்கோள்; தொல். கற்பி. சூ. 6.இளம். 4. "நச்சியார்க் கீதலும்" கார். 7. 5. "ஈதன்மாட் டொத்தி பெரும" என்பது இகரவீறு தகரத்தை யூர்ந்து எதிர்காலம்பற்றிவருமென்பதற்கும் (தொல். வினையியல். சூ. 26. நச்; இ - வி. சூ. 238) தகரம் சிறுபான்மை எதிர்காலம் காட்டி வருமென்பதற்கும். (இ - வி. சூ. 49) மேற்கோள். ககர தகரங்களை ஊர்ந்துவரும் இகரம் ஏவல் கண்ணியே நிற்குமென்பர்;நச். 6. (அ) "மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய்" (ஆ) "மாதர்கொண் மானோக்கின் மடந்தை" கலி. 56 : 17; 69 : 4. 7. (அ) "வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங், கள்ளரென் றிவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்" செல்வப்பொருளை, வீதலறியா விழுப்பொருளென்றதற்கு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரை பாராட்டத் தக்கது. (ஆ) "கேடில் விழுப்பொரு டருமார்" குறுந். 216. (பிரதிபேதம்)1. பரத்தமை.
|