பக்கம் எண் :

518கலித்தொகை

ஒப்பாய்; மற்றைக் குணங்களில், காதலையுடைய மெல்லிய நோக்கினையுடைய மகளிரை நுந்தை நோய் கூரா நிற்க நோக்காது விடுமாறு போல நீயும் அவர்களை நோய்மிகாநிற்கப் பாராது விடுதலாகிய பரத்தைமையை ஒவ்வாதே கொள். எ - று. 

(1) 1ஆங்க, அசை.


என்பது ஒப்புநோக்கற்பாலது. 

(இ) இலக்கணக் கொத்து நூலாரால் அந்நூலின் 8-ஆம் சூத்திரத்து 'அரும்பொருள்' என்பதன் விசேடவுரையில், "பொருளென்னும் பெயர் பொதுவாயினும், கல்விப் பொருளினை மாத்திரம் அங்ஙனங் கூறாது, நற்பொருள், பெரும்பொருள், அரும்பொருள், குறையாப்பொருள், துணைப்பொருள், நீங்காப்பொருள், கேடில்பொருள், விளக்கும்பொருள், விழுமியபொருண் முதலாக யாதானு மோரடை கொடுத்தே கூறுவர், 'கேடில் விழுச்செல்வங் கல்வி' எனச் சிறுபான்மை பலவடையும் கொடுத்துக்கூறுவர். அக்கருத்துப் பண்டை நூல்களெல்லா வற்றினுள்ளுங்காண்க. அந்நியமம் மறந்துந்தப் பார்களென்பது தோன்ற அரும்பொருள் பெறுகவென்றாம். கலித்தொகையின் ஓர் காரண நோக்கி நிதிப் பொருளைக் கேடில் விழுச் செல்வமென்றார். இவ்வடை கல்விக் குரித்தன்றிப் பிறவற்றிற்கு முரித்தோ வென்பாரை நோக்கி, வழுவமைத்தார் நச்சினார்க்கினியர்" என்று எழுதப்பெற்றிருப்பது இங்கே ஆராய்தற்பாலது. 

1. "ஆங்கத் திறனல்ல.............பெற்ற மகன்" என்பதை ஆங்கென்பது அசைநிலையாய் வருதற்கு (நன். இடை. சூ. 18) மேற்கோள்காட்டினர், மயிலைநாதர்; ஆங்கு என்னுமசை நிலை 'ஆங்க' என இறுதி விகாரமாய் நின்றதென்று பொருத்தினர் விருத்தியுரைகாரர். "அந்திலாஅங் கசைநிலைக் கிளவியென், றாயிரண் டாகு மியற்கைத் தென்ப' என அந்தில் என்பது ஆங்கு என்னும் இடப்பொருளும் அசை நிலையுமா மென்றதை இவர் அந்திலும் ஆங்கும் இடப்பொருளும் அசை நிலையுமாமெனச் சூத்திரஞ்செய்தார். அது ஆசிரியர் கருத்தன்றென்பதை அவர் சூத்திரத்தாலும் ஆங்கு என்பது இடச்சுட்டுப் பெயர்ச் சொல்லாதலாலும் (அறிக) ஆங்கு அசைநிலை யெனக் கூறி ஆங்க என உதாரணங் காட்டிய [தினாலு] (தும்) பொருந்தா தென்க. இனி ஆங்க என்னும் அகரவீற்றிடைச்சொல் அசைநிலையெனக் கொளின் அமையும். என்னெனின் 'ஆங்கவுரையசை' எனக் கூறியதினாலும் 'ஆங்கக்குயிலு மயிலுங்காட்டி' எனவும். 'ஆங்கத் திறனல்ல யாங் கழற' எனவும், பயின்று வருதலாலு மென்க" என்று மறுத்துரைப்பர் இராமாநுச கவிராயர்; இலக்கண விளக்க நூலாரும் இக்கருத்துடையரென்பது இ - வி. 273 - ஆம் சூத்திரத்தால் விளங்கும்.

(பிரதிபேதம்) 1. ஆங்கசை.