1தொடிய வெமக்கு (1) நீ யாரை (2) 2பெரியார்க் கடியரோ வாற்றா தவர் 3எ - து: கொடியினதியல்பையுடைய பரத்தையருடைய புழுகுமுதலிய வற்றிலே அளைந்த மயிர்முடியினின்றும் உதிர்ந்த பூந்தாதுகள் நின் தோட் கட்டிலே கிடவாநிற்க, எம்மை நீ தீண்டுதற்கு எமக்கு நீ யாராந் தன்மையை யுடையை? எம்மைவிட்டு நீ நீங்குவாயாக; பிரிவாற்றாதவர் பிரியவல்ல பெரியோர்க்கு அடியரோ? அன்றே4யென்றாள். எ - று. குரல் - மயிர். நாற்றம், ஆகுபெயர். இது "சினனே பேதைமை நிம்பிரி நல்குர, வனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே" (3) என்பதனால், 'தொடிய வெமக்குநீயாரை' எனச்சினம் பற்றி வரினும் அது தன் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது.
1. (அ) "நம்பிநீ யாரை யென்றான் (ஆ) "ஐயநீ யாரை யென்றாற்கு சீவக. 954, 1718. (இ) "அய்யநீ யாரை" கம்ப. நாகபாச. 267. என்பவையும் "யாரைநீ யெம்மில் புகுதர்வாய்" கலி. 98 : 1; என்பதும் அதன் குறிப்பும் இங்கே அறிதற்பாலன. 2. "பரத்தை வாயி னால்வர்க்குமுரித்தே" என்பதற்கு, பரத்தையர் மாட்டு வாயில் விடுதல் நான்கு வருணத்தார் (ஆடவர்)க்கும் உரித்தென்று முதலிற் பொருள் கூறிப் பின் நான்கு வருணத்துப் பெண்பாலாரும் அவரோடு ஊடப்பெறுபவென்றுமாம் என்று கூறி, "பெரியார்க் கடியரோ வாற்றாதவர்" என்பதைப் * பார்ப்பனி கூற்றுக்கு (*அரசிகூற்றென்றும் பிரதிபேதம்) மேற்கோள் காட்டுவர், இளம்; தொல். பொருளி. சூ. 28. 3. தொல். பொருளியல். சூ. 51. (அ) இச்சூத்திரத்தின் இவருரையிலும் இப்பகுதி இக்குறிப்போடு இச்செய்திக்கு மேற்கோள். (ஆ) இளம்பூரணர் இச்சூத்திரத்திற்கு, "மெய்ப்பாட்டியலுள் (சிலகுணங்கள்) நடுவ ணைந்திணைக்குரிய தலைமக்கட் காகாவென எடுத்தோதுகின்றா ராகலின் அவற்றுள் ஒரு சாரன ஒரோவிடத்து வருமென்பதுணர்த்திற்று; இச்சூத்திரம் எதிரதுநோக்கிற்று; சினமுதலியநான்கும் யாதானு மொருபொருளைச் சிறப்பித்தல் காரணமாக வரும்" என்று உரைவகுத்து, "கொடியிய னல்லார்................... ஆற்றா தவர்" என்ற பகுதியை முதலாவதற்கு மேற்கோள்காட்டி, இதனுள் தொடிய வெமக்கு நீயாரை யென்பது சினம்பற்றிவரினும் காமக்குறிப்பினாற் புணர்ந்த தலைமகள் கூறுதலின் அவள் காதலைச் சிறப்பிக்க வந்த தென்றனர்; தொல். பொருளி. சூ. 49. (பிரதிபேதம்) 1. தொடீஇய, 2. பெரியோர்க்கு, 3. எ - து குரல் - மயில்................. பெயர் கொடியினியல்பை, 4. என்றாள் கடியதமக்கினியார் சொலத்தக்காமற்று.
|