பக்கம் எண் :

524கலித்தொகை

5 கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று; 
6 வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின் 
மாய மருள்வா ரகத்து; 
ஆயிழாய,் நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா 
வென்க ணெவனோ தவறு ; 
10  இஃதொத்தன், புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல் 
வள்ளுகிர் போழ்ந்தனவும் 
மொள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியு நல்லார் 
சிரறுபு சீறச் சீவந்தநின் மார்புந் 
தவறாதல் சாலாவோ கூறு;
15அதுதக்கது, வேற்றுமை யென்கண்ணோ வோராதி தீதின்மை 
தேற்றக்கண் டீயாய் தெளிக்கு;
17இனித் தேற்றேம்யாம்;
18

தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் 
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி 
நீயுறும் பொய்ச்சூ ளணங்காகின் மற்றினி 
யார்மேல் விளியுமோ கூறு.
 

இஃது அவ்வாற்றாற் புக்க தலைவனுடன் ஊடியும் உறழ்ந்துஞ்சொல்லி' பொய்ச்சூளஞ்சி ஊடறீர்ந்தது.

இதன் பொருள்.

(1) ஒரூஉக், (2) கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற 
   முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்


1. கற்புக் காலத்துத் தலைமகள் புலவிக்கண் அவளுயர்வும் தலைமகன் றாழ்வு முரியவென்பதற்கு, 'ஒரூஉக் கொடியிய னல்லார்.................தவறு' என்றபகுதிகளை மேற்கோள் காட்டி, 'இதனுள் தலைமகன் பணிவும் தலைவியுயர்வுங் காண்க; இஃதீண்டுக் கூறிய தென்னை? காமக் கடப்பினுட்பணிந்த கிளவி யென மேற் கூறப்பட்ட தாலெனின், ஆண்டுக் கூறியது ஊடல் புலவிதுனிஎன்னு மூன்றிற்கும் பொதுப்படநிற்றலின் இது புலவிக்கே யுரித்தென்னுஞ் சிறப்பு நோக்கிக் கூறியவாறு' என்பர். இளம்பூரணர்; தொல். பொருளி. சூ. 31. 'மனைவி யுயர்வும்' 

2. "ஏதிலாண் முச்சி, யுதிர்துக ளுக்கநின் னாடை யொலிப்ப, வெதிர்வளி நின்றாய்நீ செல்" கலி. 81: 30 - 32.