பக்கம் எண் :

மூன்றாவது மருதம்523

11மானோக்கி நீயழ நீத்தவ னானாது
நாணில னாயி னலிதந் தவன்வயி
1னூடுத லென்னோ வினி

 எ - து : அதுகேட்ட தோழி, மான்போலும் நோக்கினையுடையாய்! நீ அழும்படி நின்னைக் கைவிட்டவன் 2பரத்தைமையில் அமையாமல் நாணமற்றிருப்பனாயின், மேல் அவனிடத்தே நவிதலைக்கொடுத்து ஊடுகின்றதன்மை என்னபயன் தருமோவென்றாள். எ - று.

இஃது "உறுதகை யில்லாப் புலவியுண் மூழ்கிய, கிழவோள் பானின்று கெடுத்தற்கண்" (1) தோழி கூறியது.

14.

இனியாது மீக்கூற்றம் 3யாமில மென்னுந் 
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனியானாப் 
பாடில்கண் பாயல் கொள 

எ - து: அதுகேட்ட தலைவி, நெஞ்சே! நீர்விழுதல் அமையாத, துயிலுதலில்லாத கண் துயில்கொள்ளும்படியாக நாம் இனிச் சிறிதும் மேலாகக் கூறுங் கூற்றையுடையேமல்லே மென்று இவள்கூறுந் தகைமையினையுடைய கூற்றினைக் காரியமென்று நினைத்துப் பார்ப்பாயென நெஞ்சொடு4கூறி ஊடறீர்ந்தாள். எ - று. 

இதனால், 5தலைவற்கும் தலைவிக்கும் உணர்வென்னும் உவகை பிறந்தது.

இது (2)தரவும்போக்குமின்றி ஐஞ்சீரடுக்கி வந்த உறழ்கலி. (22)

(88.)

ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற 
முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் 
தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க் 
கடியரோ வாற்றா தவர்; 


1. தொல். கற். சூ. 9. இச்சூத்திரப்பகுதிக்கு, இவர், 'தலைவன் சென்று சேரும் தகைமை இல்லாமைக்குக் காரணமாகிய புலவியின்கண் அழுந்திய தலைவி பக்கத்தாளாய்நின்று அவள் புலவியைத் தீர்த்தற் கண் (தோழி கூற்றுநிகழும்)' என்று பொருள்கூறி அங்கும், 

"மானோக்கி.....................இனி" என்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார். இஃது இளம்பூரணர் கருத்தைத் தழுவியதே. 

1. இச்செய்யுளை, தரவும் போக்குமின்றி ஐஞ்சீரடுக்கி வந்த உறழ்கலிக்கு மேற்கோள் காட்டினர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்; தொல். செய். சூ. 156.

(பிரதிபேதம்) 1. ஊடுவதென்னோ, 2. பரத்தமையில், 3. நாமிலமன்றநகையது, 4. கூடியூட, 5. தலைவனும் தலைவியும் உணர்வென்னும் உவகையைப்பெற்றார்.