பக்கம் எண் :

522கலித்தொகை

இஃது (1) ஊடல்பற்றிய வெகுளியென்னும் மெய்ப்பாடு.

இனி (2) ஓருயிராயிருக்க உடம்பிரண்டாயிருப்பாயென்றால், தன்னைப் பிறன்போற் கூறிற்றாகாது; பன்மையாய் நிற்றலின்.

5ஏடா, நினக்குத் தவறுண்டோ நீவீடு பெற்றா
யிமைப்பி னிதழ்மறை பாங்கே கெடுதி
நிலைப்பா லறியினு நின்னொந்து நின்னைப்
புலப்பா ருடையர் தவறு.

 எ - து : ஏடா! நின் கண்ணை மறைத்த இமைக்குள்ளே மறைந்த பொழுதே தோன்றாமற் போதி; ஆதலால், நீ கைவிடுதலைப் பெற்றாய்; அந்நிலைமைப் பகுதியை அறிந்திருப்பினும் அறியாதாரைப்போலே நின்னை நொந்து நின்னைப் புலக்கின்றவர் தவறுடையர்: நினக்கு ஒரு தவறு உண்டோ வென்றாள். எ - று.

9அணைத்தோளாய், தீயாரைப் போல 1திறனின் றுடற்றுதி
காயுந் தவறிலேன் யான்

எ - து : அதுகேட்ட தலைவன், (3) அணைபோலுந் தோளினையுடையாய்! தீய மக்களை உடற்றுமாறுபோல ஒரு தீய திறனின்றாகவும் உடற்றாநின்றாய்; யான் நீ காய்கைக்குக் காரணமாவதோர் தவறுடையேனல்லே னென்றான். எ - று.


இளம்பூரணரும்; தொல். மெய்ப். சூ. 12. 'ஆங்கவை, ஒரு பால்' (ஆ) இதனை அச்சத்திற்கு மேற்கோள் காட்டி, தலைவனைக் கள்வன்பாற் சார்த்தி உரைத்தமையின் கள்வர் பொருளாக அச்சம் பிறந்த தென்பர் பேராசிரியரும், இ - வி. நூலாரும்; தொல். மெய்ப். சூ. 9. இ - வி. 578. 

1. ஊடற்கண் தலைமகள் வெகுட்சி கூறியதற்கு, "செய்தவ றில்வழி யாங்குச் சினவுவாய்" என்பது மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 10. பேர். 

2. (அ) "காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவ, ராகத்துளோருயிர் கண்டனம்யாம்" (ஆ) "ஆனந்த வெள்ளத் தழுந்துமொ ராருயி ரீருருக்கொண், டானந்த வெள்ளத்திடைத்திளைத்தாலொக்கும்" கோவையார். 71, 307. (இ) "பாவைநீ புலவியி னீடல் பாவியேற், காவியொன் றிரண்டுடம் பல்லது" சீவக. 1017. (ஈ) "காவிபோற் கண்ணிக்குங் கண்ணியந்தோட் காளைக்கு, மாவிபோ லாடையு மொன் றானதே" நள. கலிதொடர். 84. (உ) "மருங்கிலா நங்கையும் வசையி லையனு, மொருங்கிய விரண்டுடற் குயிரொன் றாயினார்" கம்ப. மிதிலைக். 38. என்பவை ஈண்டு அறிதற்பாலன.

3. இந்நூற்பக்கம் 322: 4, 343: 4; 400: 4 - ஆம் குறிப்புப் பார்க்க.

(பிரதிபேதம்) 1. திறனன்றுடற்றுதி.