பக்கம் எண் :

மூன்றாவது மருதம்521

(1) ஒருஉநீ யெங்கூந்தல் கொள்ளல் 1யா நின்னை 
  வெரூஉதுங் காணுங் கடை

எ - து: 2யாம் நின்னைக் காணுமிடத்து வெருவுவேம்; ஆதலால் எங்கூந்தலைத் தீண்டாதேகொள்; நீ நீங்கென்றாள் தலைவி.் எ - று.

இது வெருவவேண்டாப் பொருட்கட் கடிதிற் பிறந்ததோர் வெறியாதலின், (2) வெருவுதலென்னும் மெய்ப்பாடு.

3

தெரியிழாய், செய்தவ றில்வழி யாங்குச் சினவுவாய் 
மெய்பிரிந் தன்னவர் மாட்டு

 எ - து: அதுகேட்ட தலைவன், தெரிந்த இழையினையுடையாய்! அத்தன்மையாகிய பரத்தையர்மாட்டு உண்மையாகப் பிரிந்து யான் செய்த தவறில்லாத இடத்து நீ எங்ஙனஞ் சினப்பாயென்றான். எ - று. 

அன்னவரென்றது, நீ புலக்குந் தன்மையுடையவரென்றது.


1. (அ) தலைவன் முன் தலைவி தன்னைப் புகழ்தல், தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலும் தெளித்தலுமாகிய ஈரிடத்து 'மட்டுமுண்டென்று கூறி, ஒரூஉநீ..................காணுங் கடை' என்பதை முதலாவதற்கு மேற்கோள் காட்டி, 'இதில் தன்னை உயர்த்துக் கூறுதலாற் புகழ்ந்தாளாம்; நின்னை வெருவாதார் பிறருளரென்னு முள்ளக்கருத்தினால்' என்றும், தொல். கற்பியல். சூ. 35. 'தற்புகழ் கிளவி' (ஆ) பரத்தைவாயி னால்வர்க்கு முரித்தே (தொல். பொருளி. சூ. 29.) என்பதன் விசேடவுரையில், 'நால்வர்க்கு மென்றமையால், நான்கு வருணத்துப் பெண் பாலாரும் அவரோடு ஊடப்பெறுப' என்றுகூறி, இப்பகுதியை (பார்ப்பனியும் அரசியுமொழிந்த) 'ஏனைய வருணத்தார் கூற்று' என்றும் கூறுவர் இளம்பூரணர், (இ) யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோ, ரூராண்மைக் கொத்த படிறுடைத்துகலி. 89 : 1 - 2. (ஈ) தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்தறொடேல் சீவக. 1229. என்பவையும் (உ)கலிமயிற் கலாவத் தன்னவிவ, ளொலிமென் கூந்த லுரியவா நினக்கே குறுந். 225. என்பதும் (ஊ)நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே (புறம். 113 : 9) என்னு மூலமும் 'மணங்கமழும் கரிய கூந்தலைத் தீண்டுதற்குரியவரை நினைந்து' என்னும் அதனுரையும் ஒப்புநோக்கற்பாலன.

2. 'வெரூஉதலென்பது அச்சம்போல நீடுநில்லாது கதுமெனத் தோன்றி மாய்வதொரு குறிப்பு; அதனைத் துணுக்கென்றலுமாம்' என்று கூறி, அதற்கு, ஒருஉநீ...................கடை என்னும் பகுதியை மேற்கோள் காட்டி, 'இதில் அஞ்சத்தகுவது கண்டஞ்சுதலின்மையும் அஞ்சினார்க்கு உள்ள வேறுபாடு அதன் பின்னிகழாமையுங் காண்க' என்றும் கூறுவர்.

(பிரதிபேதம்) 1. யானின்னை, 2. யானின்னை.