பக்கம் எண் :

528கலித்தொகை

போல, சிரறுதல் சிதறுதன்மேல் நின்றது. "வேட்கை மறுத்துக் கிளந்தாங் 1குரைத்தன், மரீஇய மருங்கி னுரித்தென மொழிப" (1) என்பதனுள், "ஒன்றென முடித்தலென்பதனான் மரீஇயவாறு ஏனையவற்றிற்குங் கொள்க" என்றலின், இழிந்தோர் கூற்றை உயர்ந்தோர் கூறுவனவும் அமைத்தாம். அதனான் வள்ளுகிர் போழ்ந்தன முதலியன கொள்க.

15

அதுதக்கது, வேற்றுமை யென்கண்ணோ வோராதி தீதின்மை 
தேற்றக்கண் டீயாய் தெளிக்கு 

 எ - து: நீ கூறுகின்ற மெய்வேறுபாட்டையோ என்னிடத்துண்டாக ஓராதேகொள்; அங்ஙனம் ஓராதிருத்தல் நினக்குத்தக்கது; அதற்குக் காரணமென்னெனில் அத்தீது என்கண் இல்லாமையை யான் நினக்குத் தெளிவிக்க நீ காணாய்; யான் இனித்தெளிவிப்பேனென்றான். எ - று.

17 இனித் தேற்றேம்யாம்

எ - து: இக்கற்புக்காலத்து நீ சூளுறுகின்றதனைக்கொண்டு யாம் எந்நெஞ்சைத் தெளிவியேம்; அதற்குக்காரணங்கேள். எ - று.

18

தேர்மயங்கி வந்த தெரிகோதை (2) யந்நல்லார் 
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி 
(3) 2நீயுறும் (4) 3பொய்ச்சூ ளணங்காகின் மற்றினி 
யார்மேல் விளியுமோ கூறு.


1. தொல். பொருளி. சூ. 17. இச்சூத்திரத்தின் இவருரையிலும் இச்செய்திக்கு இக்குறிப்புக்களோடு "புள்ளிக் களவன்.....................கூறு" என்பது மேற்கோளாகக் காணப்படுகின்றது.

2. "தார்கொண்டா டலைக்கோதை தடுமாறிப் பூண்டநின் னீரணி" (கலி. 66 : 15 - 16.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

3. (அ) தலைவி தலைவன் முன் தன்னைப் புகழ்தல் தலைவன் பரத்தையிற் பிரிந்துவந்தவழித் தெளித்தற்கண் வருமென்பதற்கு, "நீயுறும் பொய்ச்.......................கூறு" என்பதை மேற்கோள் காட்டி, ‘இதில் பெண்டிர் பல ருளராயினும் அவரெல்லார்மாட்டும் செல்லாது தன்மேல் வருமெனக் குறித்தாளாதலிற் றன்னைப்புகழ்ந்தாளாம்’ என்பர். இளம். தொல். கற்பி. சூ. 39. ‘தற்புகழ்’ (ஆ) இப்பகுதியையே இவ அழிவில்கூட்டத்திற்குரிய பொருள்களுள் தெய்வமஞ்சலென்பதற்கும் மேற்கோள்காட்டுவர்; தொல். மெய்ப். சூ. 24. ‘தெய்வ’(இ) ஓசை வேற்றுமையால் றகரவுகரம் வியங்கோள்முற்றாயும் நிற்குமென்பதற்கும் இப்பகுதியே மேற்கோள்; தொல். வினை. சூ. 6. நச்.

4. (அ) "என்னை யருளி யருண் முருகு சூள்சூளி, னின்னை யருளி லணங் கான்மெய் வேறின்னும், விறல் வெய்யோ னூர்மயில் வேனிழ

(பிரதிபேதம்) 1. உணர்த்தன்மரீஇய. 2. நீ கூறும். 3. பொய்ச்சூ ழணங்காகும்.