எ - து: (1) தேரேறிவருகின்ற சிறப்பிலேமயங்கி நின் தீங்கைக் கருதாது வந்த தெரிந்த கோதையையுடைய அழகிய பரத்தையருடைய (2) தாரை நின் தாராக நினைத்து அணிந்துவந்த தப்பிற்கு அஞ்சி யாம் ஊடிப் பொருத போரிலே கலங்கி இக்கற்புக்காலத்து நீ சூளுறும் மிகப்பொய்யாகிய 1சூளுறவு வருத்தத்தைச் செய்யுமாயின், பின்னை அதுதான் எங்கண்மே லன்றி யார் மேல் வரும்? அங்ஙனம் வாராமற் களவுகாலத்துச் சூளுறவுபோற் கெடுமோ? நீதானே கூறுவாயாகவென ஊடறீர்ந்து கூறினாள். எ - று. யார்மேல் வருமென ஒருசொல் வருவிக்க. இனி நீயுறுமென்க. இஃது இன்னாத்தொல்சூளெடுத்தற்கண்ணும்" (3) என்பதனாற் கூறிற்று. என்றது, இன்னாங்குப் பயக்குஞ் சூளுறவினைத் தலைவன் சூளுறுவலெனக் கூறுமிடத்துமென்றவாறு. தலைவன், "வந்த குற்றம் வழிகெட வொழுகி" (4) களவிற் சூளுறவான் வந்த ஏதம் நீக்கி, இக்கற்புக்காலத்துக் கடவுளரையும் குரவரையும் புதல்வனையுஞ் சூளுறுதலின் இன்னாதசூளென்றாள்; இது
யறவ ரடிதொடினு மாங்கவை சூளேல், குறவன் மகளாணை கூறேலா கூறே, லைய சூளி னடிதொடு குன்றொடு, வையைக்குத் தக்க மணற் சீர்சூள் கூறல்" பரி. 8 : 65 - 71. (ஆ) "பொய்ச் சூளா னென்ப தறியேன்யா னென்றிரந்து, மெய்ச்சூ ளுறுவானை மெல்லியல் பொய்ச் சூளென், றொல்லுவ சொல்லா துரைவழுவச் சொல்ல" பரி. 12 : 63 - 65. 1. "நேரிழை நல்லாரை நெடுநகர்த் தந்துநின், றேர்பூண்ட நெடு நன்மான் றெண்மணிவந் தெடுப்புமே" கலி. 70: 18 - 19. 2. தாரென்பது ஆடவர்மார்பின் மாலைக்குவருதலே பெருவழக்கு; மகளிர் மாலைக்கும் அருகி வழங்கும். 3. தொல். கற்பி. சூ. 9.(அ) இச்சூத்திரப்பகுதியினுரையில் "வேற்றுமை .........................கூறு" என்ற பகுதிகளை மேற்கோள்காட்டி, தலைவி எம்மேலே இப்பொய்ச்சூளால் வருங்கேடுவருமென மறுத்தவாறு காண்கவென்பர். நச்.(ஆ) இச்சூத்திரத்து, "தன்வயிற் சிறப்பினு மவன்வயிற் பிரிப்பினு மின்னாத்தொல்சூ ளெடுத்தற் கண்ணும்" எனப்பாடங்கொண்டு, தன் மாடடு நின்ற மிகுதியானும் அவன் மாட்டு நின்ற வேறுபாட்டானும் இன்னாத பழைய சூளுறவைத் தலைவி யெடுத்தவழியும் கூற்று நிகழும்; தலைமகண் மாட்டு மிகுதியாதோ வெனின், ‘மனைவி யுயர்வும் ..................உரிய’ என்றா ராகலின், அக்காலத்து மிகுதி யுளதாம்’ என்று கூறி, "தேர்மயங்கி ...........................கூறு" என்பதை மேற்கோள் காட்டுவர் இளம்பூரணர். 4. தொல். கற். சூ. 5. (பிரதிபேதம்) 1. சூளுறவாயின வருத்தத்தைச்செய்யும் பின்னை.
|