பக்கம் எண் :

மூன்றாவது மருதம்531

இது தலைவன் "காமத்தின்வலியும்" (1) 1என்றதனால் ஆற்றாமைவாயிலாக வலிந்துபுக்கு நெருங்கிக் கூடுமிடத்து 2அவனுடன் தலைவி ஊடிச் சில 3சொல்லி, அவன் ஆற்றாமை கூறுவது கேட்டு ஊடறீர்ந்தது.

இதன் பொருள்.

(2) யாரிவ னெங்கூந்தல் கொள்வா (3) னிதுவுமோ 
(4) ரூராண்மைக் கொத்த படிறுடைத் (5) தெம்மனை 
வாரனீ (6) 4வந்தாங்கே 5மாறு


1. தொல்.கற். சூ. 5.

2. (அ) "பரத்தை வாயி னால்வர்க்கு முரித்தே" என்பதற்கு, பரத்தையர் மாட்டு வாயில்விடுதல் நான்கு வருணத்தார்க்கு முரித்தென்று முன்னுரைகூறி, பின்பு நான்குவருணத்துப் பெண்பாலாரும் அவரோடூடப் பெறுபவென்ற வாறுமா மென்று கூறி "யாரிவனெங்...................படி றுடைத்து" என்பதை * அரசி கூற்றுக்கு (பார்ப்பனி கூற்றுக்கு என்றும் பிரதிபேதம்) மேற்கோள் காட்டினர்; இளம்பூரணர்; தொல். பொருளி. சூ. 28. (ஆ) இப்பகுதி, கூறுகின்றாள் தலைவி யென்பதூஉம் கூறப்பட்டான் தலைவ னென்பதூஉம் முன்னத் தானுணரப்படுதற்கு மேற்கோள்; தொல். செய். சூ. 207. பேர். நச். இ - வி. சூ. 577. (இ) தலைவி, தலைவன் குறிப்பறிதல் வேண்டி வேற்றுமைக்கிளவி கூறியதற்கு, "யாரிவ னெங்கூந்தல் கொள்வான்" என்பது மேற்கோள்; தொல். கற்பியல். சூ. 16. ‘அவன்குறிப்பு’ இளம். (ஈ) "ஒரூஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யா நின்னை, வெரூஉதுங் காணுங் கடை" (கலி. 87 : 1 - 2) என்பதும் அதன் குறிப்பும்பார்க்க. 

3. தலைவி தலைவ னாண்மையிற் பழிபடக் கூறுதலாகிய, மாறிலாண்மையிற் சொல்லிய மொழிக்கு, "இதுவுமோர்..................றுடைத்து" என்பது மேற்கோள்; தொல். பொருளி. சூ. 50. நச். இதனை, உள்ளுறைப்பாற் படுவதாகிய அவையன் மொழிக்கு மேற்கோள்காட்டி, இது தீயொழுக்க மொழுகினாயென இடக்கரடக்கி அவையன்மொழியால் ஒழுக்கக்குறைபாடு கூறியவா றென்பர், இளம்; தொல். பொருளி. சூ. 48. ‘மங்கல’

4. (அ) "தண்டுறையூர தகுவதோ - வொண்டொடியைப், பாராய் மனைதுறந்தச்சேரிச் செல்வதனை, யூராண்மை யாக்கிக் கொளல்" ஐந்-எழு. 54. எனவும் (ஆ) "ஊராண்மை யென்னுஞ் செருக்கு" திரிகடுகம். 6.(இ) "ஊராண்மை மற்றதனெஃகு" குறள். 773. எனவும் வருவன காண்க.(ஈ) ஆண்மை, ஆளுந்தன்மையென்னும் பொருளில் வருதற்கு, "ஊரா...................... றுடைத்து" என்பது மேற்கோள்; தொல். கிளவி. சூ. 57. நச். 

5. "யாரைநீ யெம்மில் புகுதர்வாய்" கலி. 98 : 1. 

6. "ஆறு மயங்கினை போறிநீ வந்தாங்கே, மாறினி" கலி. 95: 3 - 4. 

(பிரதிபேதம்) 1. என்றதனால் வாயிலாகப்புக்கு, 2. அவனுடைய தலைவி. 3. சொல்லிவந்தானாற்றாமை, 4. வந்ததேனின்று, 5. மாற்றென்னிவை, மற்றென்னிவை.