எ - து: இவன் யார்? 1எங் கூந்தலைத் தொடுதற்கு இவன் என்ன தொடர்புடையனென நெஞ்சொடு கூறி, பின்னர் இங்ஙனங் கூந்தலைப் பிடிக்கின்ற இதுவும் நீபாதுகாத்தலின்றிப் பாதுகாப்பாரைப் போலே 2பண்ணிக் கொண்டு ஊரையாளுந் தன்மைக்குப் பொருந்தினதொரு கொடுமையை யுடைத்து; இதனை ஓர்ந்துபார்; இனி நீ எம் மனையிடத்தே வாராதேகொள்; வந்தாற்போலே மீண்டுபோவென்றாள். எ - று. இது (1) வலிந்துபுக்கது கூறிற்று, வான், வினையெச்சம். 4 | 3என்னிவை, (2)ஓருயிர்ப் புள்ளி னிருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றாப் 4புலவனீ கூறினென் னாருயிர் நிற்குமா றியாது |
1. தலைவன் வலிந்து சென்றதனைத் தலைவி துனியால் மறுத்துக் கூறியதற்கு, "யாரிவன்...................மாறு" என்பது மேற்கோள்; தொல். கற். சூ. 5. நச். 2. (அ) "யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பி, னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே" (ஆ) "ஒரு குடற் படுதர வோரிரை துற்று, மிருதலைப் புள்ளி னோருயிர் போல"(இ) "உள்ளத் துவகை யொருதலைப் பட்ட விருதலைப்பைம், புள்ளொத் தினிய புதுமலர்ப் பாயற் புணர்ந்த வின்ப, வெள்ளக் கடலிடை வீழ்ந்துட னீந்துவர்" (ஈ) "ஓருயிர்த்தா, யிருதலைப் புள்ளி னியைந்தநுங் கேண்மையை யெண்ணி"(உ) "இருதலைப்புளி னுற்றவோருயி ரென்ன நும்முட னாகியே, மருவு துன்பமு மின்பமும்வழு வாதுதுய்த்திடு மாட்சியேன்"(ஊ) "இருதலைசே ரொருபுள்ளி னேகவுயி ராய்நீவிர், மருவியிட ரறியாமே வாழுநாள்" என்பவைகளும். (எ) "அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ" என்புழி, யானென்பதற்கு, ‘இருதலைப் புள்ளி னோருயி ரேனாகிய யான்’ என்று (கோவையார். 12.) பேராசிரியரும், (ஏ) "யார் பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு" என்புழி, ‘இருதலைப் புள்ளி னோருயிரே னாதலாற் பிரிவும் வரவும் வினாவும் செப்பும் நம்மிடை உளவாகா’ என்றும். பரி. 8: 72.(ஐ) "ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங், கூடியார் பெற்றபயன்" என்னுங்குறளில், ‘(இம்மூன்று பயனும்) இருதலைப்புள்ளி னோருயிராய உழுவலன் புடைய எமக்குவேண்டா’ என்றும் (குறள். 1109) பரிமேலழகரும். (ஒ) "காதலாளுட லுள்ளுயிர் கைவிடி, னேதமென்னுயி ரெய்தி யிறக்கும்" என்புழி, ‘யாம் இருதலைப் புள்ளி னோருயிரேமாதலிற் காதலா ளுயிர் நீங்கின்’ என்னுயிரும் ஏதமெய்தி நீங்கும்’ என்று (சீவக. 1631.) (பிரதிபேதம்) 1. இவனெங் கூந்தலைத்தொடுதற்கு என்ன, 2. பணிக்கொண்டு. 3. என்னவை, ஏஎஇவை. 4. புலவுநீ கூறியென்.
|