எ - து: அதுகேட்ட தலைவன், உடலும் உயிரும் ஒன்றாய்த் தலை இரண்டாகிய புள்ளினுடைய அவ்விரண்டு தலையில் ஒருதலை மற்றத்தலையோடே 1போர்செய்தலை மேற்கொண்ட தன்மைத்தாக, நீ இக்கொடுமைகளைக் கூறிப் புலந்தாற் பயனென்? அதனைக் கைவிட்டு இனி என்னுடைய அரிய உயிர் நிற்கும்வழி யாது? அதனைக் கூறுவாயென்றான். எ-று. இஃது (1) ஆற்றாமைகூறிற்று, புலவல், புலத்தலெனப் படுத்தலோசையாற் பெயராய்நின்றது. இவை கூறிப் 2புலவ லென்னென்க. கூறு என வருவிக்க. 7 | (2) ஏஎ, இகழ்ச்சிக்குறிப்பு. |
நீங்கின காலமெல்லாம் மறந்து ஈண்டு வந்தால் இறந்து 3படுவேனெனக் கூறலின், அதனை ஏஎயென இழித்து நெஞ்சொடுகூறினாள். தெளிந்தேம்யாங் காயாதி 4யெல்லாம்வல் 5லெல்லா (3) பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் 6நொடித் தாங்கு வருந்தனின் வஞ்ச முரைத்து |
எ - து: ஏடா! எல்லாம் உணர்ந்திருக்கும் பெரிய காட்டிடத்திற் கொற்றவைக்கு அவள் அறியாதன சில உண்டாகப் பேய் நொடிசொன்னாற்போல, நின்பொய்களை எனக்குச் சொல்லி வருந்தாதேகொள்; யாம் முன்பே நின் வஞ்சனைகளைத் தெளிந்துவிட்டேமென்றாள். எ - று.
நச்சினார்க்கினியரும் எழுதியவுரைகளும் ஈண்டு அறிதற்பாலன. (ஓ) "எட்டுக் காலொடு மிரண்டுவன் றலையொடு மெரிகால், வட்டக் கண்ணொடும் வளைபிறை யெயிற்றொடுந் தழங்கிக், கிட்டிக் கொண்டவச் சிம்புளின் கிளர்ச்சியை யஞ்சி, விட்டுக் கண்ணுதற் குரைத்திட வோடினள் விமலை" (ஒள) "பிரிவரும் புள்ளி னொருமையி னொட்டி" என்பவற்றிற்குறித்த புள்ளும் இஃதென்பாரு முளர். 1. தலைவன் வலிந்து சென்றதனைத் தலைவி கூறிய வழி, "என்னிவை......... ...................யாது" என்பது தலைவன் ஆற்றாமை மிகுதியாற் சென்றமை கூறியதற்கு மேற்கோள்; தொல். கற்பியல். சூ. 5. நச். 2. "ஏஎ தெளிந்தே யாம்" என்பதை ஏ அசைநிலையாய் வருதற்கும் மேற்கோள்காட்டினர், தெய்வச்; தொல். இடை. சூ. 23. ‘ஏயுங் குரையும்’ 3. (அ) "துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்கு" பெரும்பாண். 459. (ஆ) "அரற்றென்பது அழுகை யன்றிப் பலவுஞ்சொல்லித் தன், குறைகூறுதல்; அது காடுகெழுசெல்விக்குப் பேய்கூறும், அல்லல்போல வழக்கினுள்ளோர் கூறுவன"; தொல். மெய்ப். சூ. 12. பேர். (பிரதிபேதம்) 1. போர்தலைமேற்கொண்ட. 2. புலவலெனென்க கூறியென, புலவலெனக் கூறியென. 3. படுவலெனக்கூறலின், 4. அல்லாவ தெல்லா, எல்லாவெல்லா. 5. ஏடா. 6. நொடிந்தாங்கு.
|