காமக்கிழத்தி ஊடிச்சொல்லித் தலைமகன் ஆற்றாமைகண்டு தன் ஆற்றாமை யுஞ்சொல்லி ஊடறீர்ந்தது. இதன் பொருள். | கண்டேனின் மாயங் களவாதல் பொய்ந்நகா | | (1) 1மண்டாத சொல்லித் 2தொடாஅ றொடீஇயநின் | | பெண்டி ருளர்மன்னோ வீங்கு |
எ - து: நின் 3பரத்தைமை இக்காலத்துக் களவொழுக்கத்தேயாதலைக் கண்டேன்; ஆதலாற் பொய்யாகவே நக்கு, யான் விரும்பாதனவற்றைக் கூறி என்னைத் தீண்டாதேகொள்; நீ தீண்டுதற்கு இவ்விடத்து நினக்குப் பெண்டிரா யிருப்பார் உளரோ? இல்லையே என்றாள். எ - று. மன்னும் (2) ஓவும் அசை. 4 ஒண்டொடிநீ, கண்ட தெவனோ தவறு எ - து: அதுகேட்ட தலைவன், ஒள்ளிய தொடியினையுடையாய்! நீ என்னுடைய தவறாகக் கண்டது எவனென்றான். எ - று. 5 (3) கண்டது, (4) நோயும் வடுவுங் கரந்து மகிழ்செருக்கிப்
ஒழுகாது அவர்புல்லுதலை மறைத்தொழுகுதலாற் காமக்கிழத்தியர்க்குப் பிறக்கும் புலவிக்கண்ணும் அவர்க்குக் கூற்றுநிகழுமெனவும் பொருள் கூறுக" என்று பின்னதாக ஒரு விசேட வுரை யெழுதி; "உதாரணம், ‘கண்டேனின் மாயங் களவாதல் பொய்ந்நகா’ என்னும் மருதக் கலியுட் காண்க" என்பர். 1. "மண்டாத கூறி" கலி. 108 : 21. 2. ஓவும் அசையென்பதை நோக்க, உளரென்பதற்கே ஓசை வேற்றுமை செய்து உளரோவென்று பொருள்கொண்டாரென்று தோற்றுகிறது. 3. "தான் முன் கண்ட தவற்றின ளாதலிற், சென்ற வாயிற் கொன்றல ளூடி" பெருங். (1) 37: 167 - 168. 4. "முதலொடு.............................ஐந்நிலம் பெறுமே" என்னும் சூத்திரத்திற்கு, 'ஐந்நிலம்: களவும் உடன்போக்கும் இற்கிழத்தியும் காமக்கிழத்தியும் காதற்பரத்தையு மெனப்பட்ட ஐவகைக் கூட்டமென்றும், ஐந்நில மென்பதனை முல்லை குறிஞ்சி முதலாயின வென்றா ருளராலெனின், முதலொடு புணர்ந்தவென்பதனான் நிலம் பெறு மாதலான், நில மென்பதற்கு வேறுபொரு ளுரைத்தல் வேண்டுமென்றும், இற்கிழத்தி காமக்கிழத்தி யென்பார் உள்ளப்புணர்ச்சியானாதல் மெய்யுறு புணர்ச்சி யானாதல் வரையப் பட்டா ராக, பொருட்பெண்டி ராகிய காதற் (பிரதிபேதம்) 1. வண்டாத, 2. தொடாஅற்றொடீஇய, 3. பரத்தமை.
|