பக்கம் எண் :

536கலித்தொகை

5கண்டது, நோயும் வடுவுங் கரந்து மகிழ்செருக்கிப்
 பாடு பெயனின்ற பானா ளிரவிற்
 றொடிபொலி தோளு முலையுங் கதுப்பும்
 வடிவார் குழையு மிழையும் பொறையா
 வொடிவது போலு நுசுப்போ டடிதளரா

 

10 வாராக் கவவி னொருத்திவந் தல்கற்றன்
 சீரார் ஞெகிழஞ் சிலம்பச் சிவந்துநின்
 போரார் கதவ மிதித்த தமையுமோ
 வாயிழை யார்க்கு மொலிகேளா வவ்வெதிர்
 தாழா தெழுந்துநீ சென்ற தமையுமோ

 

15 மாறாள் சினைஇ யவளாங்கேநின் மார்பி
 னாறிணர்ப் பைந்தார் பரிந்த தமையுமோ
 தேறிநீ தீயே னலேனென்று மற்றவள்
 சீறடி தோயா விறுத்த தமையுமோ
 கூறினிக் காயேமோ யாம்;

 

20தேறிற், பிறவுந் தவறிலேன் யான்
 அல்கற், கனவுக்கொ னீகண் டது;

 

22கனைபெயற், றண்டுளி வீசும் பொழிதிற் குறிவந்தாட்
 கண்ட கனவெனக் காணாது மாறுற்றுப்
 பண்டைய வல்லநின் பொய்ச்சூ ணினக்கெல்லா
 நின்றாய்நின் புக்கில் பல;

 

26மென்றோளாய், நல்குநின் னல்லெழி லுண்கு;
27ஏடா, குறையுற்று நீயெம் முரையனின் றீமை
 பொறையாற்றே மென்றல் பெறுதுமோ யாழ
 நிறையாற்றா நெஞ்சுடை யேம்.

இது "புல்லுதன்மயக்கும் புலவிக்கண்ணும்" (1) என்பதனால் தலைவன் புலப்படப்பரத்தையரிடத்து ஒழுகாது மறைந்தொழுகிவந்து 1நின்றவனுடன்


உறழ்தற்பொருளாலும் இச்செய்யுளைக் கலிவெண்பா என்று கொள்ளாது உறழ்கலியென்று கொள்ளுதலே பொருத்த முடையது.

1. தொல். கற்பியல். சூ. 10. இச்சூத்திரப்பகுதிக்கு இவ்வுரைகாரர் அங்கு, "இரட்டுறமொழிதலென்பதனால், பரத்தையரிடத்துப் புலப்பட

(பிரதிபேதம்)1 நின்றிவனுடன்.