பக்கம் எண் :

மூன்றாவது மருதம்535

எ - து: அதுகேட்ட தலைவி, 1நெஞ்சே! இவனைப் (1) பொய்சொல்லவிடே மென்று மாறுபட்டுக் கோபிக்கின், தப்பினேனென்று வணக்கஞ்செய்தலும் இவனுக்குப் பரிகாரமுண்டு; ஆதலான் நம்மை மறந்து ஒருகாலமும் நாம் மாட்சிமைப்பட்டிருக்க நினையாத நாணமில்லாதவனுக்கு இவ்வூடற்போரைத் தோற்று அதனாலுள்ள பயனைக் காண்பாயென்று ஊடறீர்ந்தாள். இதனால், தலைவிக்குச் 2சூழ்ச்சியும் தலைவற்குப் புணர்வாகிய உவகையும் 3பிறந்தன." ஒருசிறை நெஞ்சமொ டுசாவுங் 4காலை, யுரிய தாகலு முண்டென மொழிப" (2) என்பதனால், இவன் 5ஆற்றானென நெஞ்சுடன் உசாவினாள்.

இஃது ஐஞ்சீரடுக்கிவந்த (3) கலிவெண்பா. (24)

(90.)கண்டேனின் மாயங் களவாதல் பொய்ந்நகா
 மண்டாத சொல்லித் தொடாஅ றொடீஇயநின்
 பெண்டி ருளர்மன்னோ வீங்கு;
4ஒண்டொடிநீ, கண்ட தெவனா தவறு;

1. "இற்றதென் னாவி யென்னா வெரிமணி யிமைக்கும் பஞ்சிச், சிற்றடிப் போது புல்லித்திருமகன் கிடப்பச் சேந்து, பொற்றதா மரையிற் போந்து கருமுத்தம் பொழிப வேபோ, லுற்றுமைகலந்து கண்கள் வெம்பனி யுகுத்தவன்றே" என்னும் (சீவக. 2508) செய்யுளுரையில், ‘உற்று’ என்பதற்கு, ஊடறீர்தலுற வென்று திரித்துப் பொருள் கொண்டு, "பொய்ப்ப விடேஎ மென...........................முண்டு" என்றாராகலின், என இவ்வுரைக்கு மூலமான பகுதியை மேற்கோள் காட்டி, அடியில் வணங்கியபின்னும் ஊடறீரா தழுதாளென்றல் கற்பிற்குப் பொருந்தா தென்பர் நச்சினார்க்கினியர். 

2. தொல். பொருளி. சூ. 10. இச்சூத்திரத்தின் இவருரையிலும் நெஞ்சுடன் உசாவுதற்கு, "மாண.............................முண்டு" என்னும் பகுதி மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

3. இளம்பூரணர் இச்செய்யுளை உறழ்கலிக்கு மேற்கோள்காட்டி, 'யாரிவ னெங்கூந்தல் ................................மாறு' இது தலைமகள் கூற்று; ‘என்னிவை....................... யாது' இது தலைமகன் கூற்று; ‘ஏஎ, தெளிந்தேம்........................... உரைத்து’ இது தலைவி கூற்று; ‘மருந்தின்று .................................விலேன்’ இது தலைமகன் கூற்று; ‘மாண மறந்துள்ளா...............................முண்டு’ இது தலைவி கூற்று; "இப்பாட்டுச் சுரிதக மின்றி வந்தவாறு கண்டு கொள்க. எற்றுக்கு? இறுதியின்கண்வந்தது சுரிதகமாகா, தோவெனின் ஆகாது; சுரிதகமாவது ஆதிப் பாட்டினும் இடை நிலைப்பாட்டினுமுள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது; இஃது அன்னதன்றென்க" என்பர்; தொல். செய். சூ. 148. ‘கூற்று மாற்றமும்’ இதனாலும்

(பிரதிபேதம்) 1. விடேனென்று, 2. சூட்சி, 3. பிறந்தது, 4. காலையுமுரியது, 5. ஆற்றானாலென.