பக்கம் எண் :

632கலித்தொகை

15 மாறாள் சினைஇ யவளாங்கே நின்மார்பி
 னாறிணர்ப் பைந்தார் பரிந்த தமையுமோ
 தேறிநீ தீயே னலேனென்று மற்றவள்
 சீறடி தோயா விறுத்த தமையுமோ
 கூறினிக் காயேமோ யாம்

எ - து: யான்கண்டது, ஒருத்தி தானுற்ற காமநோயையும் அதனாற் பிறந்த அலரையும் பிறர் அறியாமல் மறைத்து மகிழ்ச்சியின்றியிருக்கவும் மகிழ்ச்சியுண்டாக்கிச் செருக்கிச் சொரிகின்ற மழை மாறாமல் நின்ற ஒரு நாளிற் பாதியாகிய இராப்பொழுதிலே தொடி பொலிவுபெற்ற தோளும் முலையும்கூந்தலும் (1) 1மகரத்தின்வடிவுநிறைந்த 2குழையும் ஏனை அணிகலங்களும் தனக்குச்சுமையாக முறிவதொரு (2) வஞ்சிக்கொம்புபோலும் இடையைத் தாங்கிக்கொண்டு அமைதி பிறவாத முயக்கத்தாலே அடிதளர்ந்து வந்து தங்கு தலையுடைய தன் தலைமைநிறைந்த சிலம்பொலிப்ப, கோபித்து நின்னுடைய பலகை பொருத நிறைந்த கதவத்தைப் பாய்ந்தது; அது தவறாதற்கு அமையுமோ? அந்த ஆராய்ந்த இழையினையுடையவள் ஆரவாரிக்கும் ஆரவாரத்தைக் கேட்டு அவ்வாரவாரத்திற்கெதிரே நீ நீட்டியாது எழுந்திருந்து போனது; அது தவறாதற்கு அமையுமோ? அவள் மாறாளாய்ச் சினந்து அவ்விடத்தே நின் மார்பிற் கிடந்த நாறுகின்ற இதழையுடைய செவ்விமாலையை அறுத்தது; அது தவறாதற்கு அமையுமோ? பின்னை அவளுடைய சிறிய அடியைச் செறிந்து யான் தீமையையுடையேனல்லேன்; அதனை நீ தெளியென்று கூறி அவளிடத்தே தங்கினது; அது தவறாதற்கு அமையுமோ? இனிச்சொல்லு; யாம் நின்னைக் கோபியேமோ? என்றாள். எ - று.

(3) பாடுபெயல், பாடெனவிகாரம். நாளிற்பால், பானாளென மரூஉ. நுசுப்போடென உருபுமயக்கம். கண்டது, மிதித்தது; அது அமையுமோ? கண்டது, சென்றது; அது அமையுமோ? கண்டது, பரிந்தது; அது அமையுமோ? கண்டது, இறுத்தது; அது அமையுமோ? என முடிக்க.


(எ) "பரிதியிவ் விருந்த தேவே" (ஏ) "இவ்விருந்த வேந்தல்" (ஐ) "இவ்விருந்த மீளி" (நைடத. சுயம்வர. 124, 137, 139) எனவும் பெருநூலாசிரியர்கள் அமைத்திருத்தலும் இங்கே அறிதற்பாலன; (ஒ) அகரச்சுட்டு, தனித்துநின்று பொருளுணர்த்தலாற்றாதென்று சிவஞானமுனிவர் தொல். பாயிரவிருத்தியில் கூறியிருக்கிறார்.

1. "காதிசையு, மான்மகர வார்குழையாய்" ஏலாதி. 44.

2. வஞ்சியென்பது, ஒரு கொடிக்கேயன்றி ஒருமரத்திற்கும்பெயர்; இதன் கொம்பும் வஞ்சிக்கொடியும் மகளிரிடைக்கு உவமை கூறப்படும்.

3. பார்த்தபிரதிகளிலெல்லாம் இவ்வாறே காணப்படுகின்றது; ‘படுபெயல், பாடுபெயலென விகாரம்’ என்று இருக்கவேண்டியதுபோலும்.

(பிரதிபேதம்) 1. ஆகத்தின், 2. மகரக்குழையும்.