பக்கம் எண் :

நான்காவது முல்லை633

முன்னாப் பலரும் வருகவென்று சாற்றுதலிற் பல ஏறுகளும் விடப் பலருந் தழுவித் தோற்றா 1ரென்றார்.

25 அவருள், (1) மலர்மலி 2புகலெழ வலர்மலிர்மணிபுரைநிமிர்தோள்
3பிணைஇ
4யெருத்தோ டிமிலிடைத் தோன்றினன் றோன்றி
வருத்தினான் மன்ற 5வவ் வேறு

எ - து: அங்ஙனம் ஏறுதழுவ 6வந்தவர்களுட் பரத்தல் மிக்க விருப்பம் எழுதலாலே பூமலிந்த நீலமணியையொக்கும் நிறத்தையுடைய நெடிய தோள் களாலே ஏற்றின் கழுத்தை இறுகத் தழுவிக் கழுத்தோடேகூடக் கிடக்கின்ற (2) குட்டேற்றிடத்தே தோன்றினான்; அங்ஙனந் 7தோன்றிப் பின்னர் அறுதியாக அவ்வேற்றை வருத்தினானென்றார். எ - று.

28 8ஏறெவ்வங் காணா வெழுந்தா ரெவன்கொலோ
9வேறுடை நல்லார் பகை

எ - து: ஏற்றையுடைய நல்லவர்கள் தங்கள் ஏற்றினுடைய வருத்தத்தைக் கண்டு எழுந்திருந்தார்; அவன் தழுவினவாற்றிற்கு மகிழ்வதன்றிப் 10பகையாதல் என்னபயன் தருமென்றார். எ - று.

கொல்லும் ஓவும், அசை.

30 மடவரே நல்லாயர் மக்க 11ணெருந
லடலேற் றெருத்திறுத்தார்க் 12 கண்டுமற் றின்று
முடலேறு கோட்சாற்று வார்

எ - து: முன்னைநாளிலே கொல்லுதலையுடைய ஏற்றின் கழுத்திலே தங்கினவர்களைக் கண்டு வைத்தும் 13இன்றும் உடலுகின்ற ஏற்றைத் தழுவச் சாற்றுவாராகிய நல்ல ஆயர் மக்கள் அறியாதவர்களேயென்றார். எ - று.

33 14ஆங்கினி
தண்ணுமைப் பாணி தளரா 15தெழூஉக
பண்ணமை யின்சீர்க் குரவையுட் டெண்கண்ணித்

1. அறுசீரடி முடுகி வந்ததற்கு "மலர்மலி புகலெழ வலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ" என்பது மேற். தொல். செய். சூ. 66. பேர்.

2. குட்டேறு-ஏற்றின்முதுகில் புறக்கழுத்தையடுத்துத் திரண்டு உயர்ந்து தோன்றும் ஓருறுப்பு; இச்சொல் இவருரைநடையில் பயின்று வரும்.

(பிரதிபேதம்) 1என்றாள், 2புகழெழ அலர்மலி மணிபுரை நிரைதோள், 3பணைஇ, வினைஇ, 4எருத்தோட்டிமில், 5இவ்வேறு, 6வந்தவர்கள் பார்த்தன்மிக்க, 7தோன்றிய பின்னரறுதியாகவேற்றை, 8ஏற்றெவ்வாம், 9ஏற்றுடை நல்லார்ப்பகை, 10பகையாதலால்என்ன, 11நெருனையடல், நெருநையடல், 12கண்டுமேற்றின்று முடலேற்றுக்கோட், 13மீண்டுமுடலு, 14ஆங்கு தண், 15எழுவுகப்பண்.