எ - து: அவரும் ஆண்டுச்சென்று தழுவுதற்கு யாங்கள் 1தாழ்த்திரே மென்றார்; அதுகேட்டு அவள் சுற்றத்தார் மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாள் வழியாக நிகழ்த்தும் ஏறுவிடுகின்ற விழவைப் பரக்கச்செலுத்தி இவனேயன்றி மற்றும் ஏறுதழுவுவார் உளராயினும் வருகவென்று பறையறைகவென்றார். எ - று. 15 | 2சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து 3நோக்கும்வா யெல்லா (1) மிடைபெறி னேராத் தகைத்து |
எ - து: இந்தவிழவினைப் 4பெடையையொப்பார் தங்கண்கள் பொலிவு பெற்று இவ்வழகைப் பார்க்குமிடமெல்லாம் நின்று பார்க்கும் பரணைப் பெறு வார்களாகில் அது தகைமையையுடைத்தென்றார். எ - று. இதற்குமுன் உள்ளனவும் மேல்வருகின்றனவும் கண்டசுற்றத்தார் கூறியதாகப் பொருளுரைக்க. 17 | தகைவகை மிசைமிசைப் 5பாயிய ரார்த்துட 6னெதிரெதிர் சென்றார் பலர் |
எ - து: அழகினையுடைத்தாகிய வகுப்பையுடைய அவ்வேறுகளின்மேலே பாய்கைக்குச் 7சேரஆர்ப்பரித்து ஏறுகளினெதிரேயெதிரே பலருஞ்சென்றார். எ-று. 19 | கொலைமலி சிலைசெறி 8செயிரயர் சினஞ் 9சிறந் துருத்தெழுந் தோடின்று மேல் |
எ - து: அப்பொழுது அவ்வேறுகள் கொலைத்தொழின்மிக்க 10சிலை செறிந்த குற்றத்தைச்செய்யுஞ் சினமிக்கு வெவ்விதாயெழுந்து அவர்மேலே ஓடிற்று. எ - று. 21 எழுந்தது துகள் எ - து: அப்பொழுது துகள் எழுந்தது. எ - று. 11எற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்புக் கலங்கினர் பலர் எ - து: அவர்களும் மார்புகளை எதிரே கொடுத்தார்; அவற்றின் கொம்புகளுங் கவிழ்ந்து குத்தின; அதனால், தழுவினவர்கள் பலரும் கலங்கிப்போனார். எ - று.
1. மிடை - பரண். (பிரதிபேதம்) 1தாழ்த்திரென்றார், 2சாற்றுவள், 3நோக்குவாயெல்லா, 4பெடையொப்பார், 5பாயப்பார், பாய்மார், 6எதிர்சென்றார். 7சேர வாரவாரித்து, 8செயிரசினஞ், 9சினந்து, செறிந்து, 10சிலைச்செறிந்த, 11 ஏற்றனமார்பு.
|