திண்டோட் டிறலொளி மாயப்போர் 1மாமேனி (1) யந்தவ ராடைப் பொதுவனோ டாய்ந்த 2முறுவலாண் மென்றோள்பா ராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்த துரை எ - து: இப்பொழுது அவ்விடத்துச் சிறுகுடியின் மன்றத்தில் ஆடுகின்ற பண்ணமைந்த இனிய தாளத்தையுடைய 3குரவைக்கூத்தினுள்ளே விளங்கிய கண்ணியையும் திண்ணிய தோளினையும் திறலினது விளக்கத்தினையும் மாயத்தையுடைய போர்த்தொழிலினையும் கரியமேனியினையும் அழகிய துவரூட்டின ஆடையினையுமுடைய பொதுவன் தோளையும் ஆராய்ந்த முறுவலாளுடைய மென்றோளையுங் கொண்டாடி ஏறுதழுவின புகழ் பரந்தது; இனி மணஞ் செய்தற்குத் தண்ணுமையில் தாளந்தளராமல் எழுப்புவார்களாக வெனக் கண்ட சுற்றத்தார் 4கூறினார். எ - று. பொதுவன் தோளிற்கு அவள் தோள் நிகர் ஒக்குமென்று பாராட்டி இனிப் பொதுவனோடே மென்றோளையுடைய முறுவலாளையும் பாராட்டி யென்றலும் ஒன்று. இதுவும் சிறப்பில்லா ஆசுரமாகிய கைக்கிளை. 5"பாங்கனிமித்தம் பன்னிரண் டென்ப" (2) என்றதனான் ஆசுரத்திற்கும் பாங்கி நிமித்த மாயினாள். இதனால், இருவர்க்கும் 6நினைதல் பிறந்தது. 7இஃது "ஆசிரிய மருங்கினும் வெண்பாமருங்கினு, மூவகை யடியு முன்னுதலிலவே" என்னும் (3) சூத்திரத்திற் கொண்ட நாற்சீரடி 8முடுகியலோடு தொடர்ந்த "தகைவகைமிசைமிசை", "கொலைமலி 9சிலைசெறி" என்னும்வெண்
1. "ஆயர்களுக்குத் துவராடையுடை கூறப்படுதலை, (அ) "கருந்துவராடையை" கலி. 108 : 10. (ஆ) "செந்துவ ராடையாயர்" சீவக. 485. (இ) "அலங்கு செந்துவ ராடையர்" பாக. (10) கஞ்சனைக் கொன்ற. 6. என்பவற்றாலும் அறிக. 2. தொல். கள. சூ. 13. 3. தொல். செய். சூ. 67. இச்சூத்திரவுரையிலும் தகைவகை மிசைமிசைப் ....................சென்றார் பலர் என்னும் பகுதியை நாற் சீரடி முடுகியலோ டொன்றாய் வந்த வெண்பாவுக்கும், "மலர்மலி புகலெழ.......................... வருத்தினான் மன்றவவ் வேறு" என்னும் பகுதியை அறுசீரடி முடிகிய லோடொன்றாய் வந்த வெண்பாவுக்கும் மேற்கோள் காட்டினர். நச். (பிரதிபேதம்)1மாமணி, 2முறுவலாய்மென்றோள், பாராட்டச், 3குரவைக் கூத்தினுள்ளே பொதுவன்றோளையும், 4கூறினார். விளங்கியகண்ணியையுந்..............ஆடையினையுமுடைய பொதுவனென்க. பொதுவன் தோளிற்கு, 5பாங்கினிமித்தம், 6நினைத்தல்பிறந்தது, 7இது ஆசிரிய, 8முடுகியலுந் தொடர்ந்த, 9நிலைசெறி.
|